"24 + 32.." தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! சற்று முன் வந்த உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மொத்தம் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை தமிழ்நாடு அரசு 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே இப்போது மேலும் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உத்தரவு: அதன்படி பயங்கரவாத தடுப்புப் பிரிவு கோவை பிரிவின் எஸ்பியாக இருந்த வி சசிமோகன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக இருக்கும் தேஷ்முக் ஷேகர் சஞ்சய் இப்போது சென்னை ஐகோர்ட் வழக்குகளைக் கண்காணிக்கும் பிரிவிற்கான எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவு அதிகாரியாக இருந்த ஒம்பிரகாஷ் மீனா இப்போது காவல்துறையை நவீனமாக்கும் பிரிவுக்கான எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்பயாக இருந்த மகேஷ்வரன் இப்போது ஆவடி போலீஸ் ஆணையரகத்தின் தலைமையகம் மற்றும் நிர்வாக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியிடமாற்றம்: ஆவடி போலீஸ் ஆணையரகத்தின் தலைமையகம் மற்றும் நிர்வாக துணை ஆணையராக இருந்த ஜெயலட்சுமி, மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், என்ஐபி சிஐடி பிரிவின் அதிகாரி சாம்சன் இப்போது அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்து வந்த பத்ரி நாராயணன் இப்போது கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரேட்டர் சென்னையில் டிசிபியாக இருந்த அன்கித் ஜெயின் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 8ஆவது பட்டாலியனின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இடமாற்றம்: சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ஈஸ்வரன் இப்போது சென்னை ரயில்வே எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் போலீஸ் ஆணையரகத்தின் தலைமையகத்தில் டிசிபியாக இருந்த மணி இப்போது தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 3ஆவது பட்டாலியனின் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக பணியாற்றி வந்த ராஜன் இப்போது திருச்சி ரயில்வே எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை ரயில்வே எஸ்பியாக இருந்த அன்பு, ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட எஸ்.பிக்கள் உட்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. உள்துறை செயலர் தீரஜ் குமார் போட்ட உத்தரவு!
உத்தரவு: மாநில போலீஸ் முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக இருந்த வனிதா இப்போது மதுரை நகரப் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி ஆக விஜயகார்த்திக் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு சட்டம் & ஒழுங்கு துணை ஆணையராகச் சுஜாதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல சென்னை குற்றப் பிரிவு சிஐடி ஆகச் சண்முக பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படி மொத்தம் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மொத்தம் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
