கரூரில் உண்மையில் நடந்தது என்ன? வதந்தி பரப்பிய தவெக விஜய்! வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அமுதா ஐஏஎஸ்!
சென்னை: கரூரில் உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அதிகாரி தமிழக அரசு சார்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.
கரூரில் தமிழக காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள் என்ற கேள்விக்கு வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ள தமிழக அரசு, காவல்துறையினருக்கு விஜய் நன்றி தெரிவிப்பதையும் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு காவல்துறையினர் முதலுதவி செய்வதையும் அவர்களை மீட்பதையும் சுட்டி காட்டி விளக்கம் அளித்துள்ளனர்.

சதி நடந்திருப்பதாக தவெக தரப்பு கூறி வரும் நிலையில் வீடியோவை வெளியிட்டு தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது. அதில், தவெகவினர் கூறியதைவிட அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால்தான் வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்பட்டது வேலுச்சாமிபுரத்தில் வழக்கத்தைவிட கூடுதலான பாதுகாப்பு தவெகவினருக்கு வழங்கப்பட்டது; 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே வழக்கமானது; இங்கு 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது, இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால் 5,000 பேர் மட்டுமே திரள முடியும். வேலுசாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக் கொண்டனர்"
அமுதா ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்
காவல்துறை சிறப்பாக செயல்பட்டதால்தான் அவர் காவல்துறைக்கு நன்றி சொன்னார். காவல்துறை இல்லையென்றால் இங்கே வந்திருக்க முடியாது என்று விஜய் கூறி இருந்தது இதற்கு உதாரணம். போலீசார் தடியடி நடத்தவில்லை.
வாகனம் செல்ல , ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாத போது, கூட்டத்தை நகர்த்தி, போலீசார் விரட்டி மட்டுமே விட்டனர். தடியடி எல்லாம் நடத்தவில்லை. ஆம்புலன்ஸ்களுக்கு அழைப்பு வந்தது. அதற்கான ஆதாரங்கள் இதோ (ஆம்புலன்ஸ் கால் ரெக்கார்டிங் ஆதாரங்களை காட்டுகிறார்). விஜய் வரும் போதே அவரை பின்தொடர்ந்து பெரிய கூட்டமும் வந்தது.
அங்கே வந்த ஆம்புலன்சுகள்., அதாவது 7 ஆம்புலன்சுகள் அவர்களின் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்து இருந்த ஆம்புலன்சுகள். அவர்களின் கட்சியின் வந்த ஆம்புலன்ஸ்கள் போதவில்லை என்ற பின்புதான் 108 ஆம்புலன்சுகள் வந்தன. கரூரில் விஜய் பேசும் போது மின்சாரம் நிறுத்தப்படவில்லை. அதற்கான ஆதாரங்கள் இந்த வீடியோவில் உள்ளன. அவர் பேசும் போது முழுமையாக மின்சாரம் இருந்தது. போலீஸார் தொண்டர்களை விலக்கிவிட்டனர்; தடியடி நடக்கவில்லை.
ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடு
ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடுகளை தவெகவினர் பிரித்துச் சென்றதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது, தவெக துண்டு அணிந்தவர்தான் மின்சார ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர்.
விஜய் பரப்புரை வாகனம் கூட்டத்திற்குள் வர முடியாத அளவுக்கு இருந்தால், போலீசார் கூட்டத்தை விலக்கினர். ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல வேண்டாம் என டி.எஸ்.பி. எச்சரித்தும் அவர்கள் அதனை ஏற்கவில்லை. கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதாக கூறுவது தவறு. கூட்டத்திற்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றுதான் அண்டை மாவட்டங்களில் இருந்து கூட போலீஸ் கொண்டு வந்தோம்.
பிரேத பரிசோதனை குடும்பத்தினர் கோரிக்கையின் பெயரில் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை தாமதப்படுத்தப்பட்டு இருந்தால்..நிலைமை மோசமாகி இருக்கும். நிலைமை பதற்றம் ஆகி இருக்கும். இதற்காக கூடுதல் மருத்துவர்களை வரவழைத்துதான் பிரேத பரிசோதனை மேற்கொண்டோம், என்று வீடியோ ஆதாரங்களுடன் அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
6 இடங்களுக்கு வரும் இடைத்தேர்தல்.. ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் களமிறக்க தவெக மாஸ்டர் பிளான்! -
சரியான இடத்தில் சரியான அமைச்சர்.. இரவிலும் கடமை தவறாத வன்னியரசு.. குவியும் பாராட்டு -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!












Click it and Unblock the Notifications