முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் உடல்நலனை பாதுகாக்க அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்பன உள்ளிட்ட பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. இதன் விளைவாக, நீரிழப்பு, மயக்கம், உடல் சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும், இல்லையெனில் நிழல் பகுதிகளில் தங்கிக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்ககளின் உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாக இருப்பதால், வெயில் தாக்கம் வேகமாக பாதிக்கக்கூடும். அதேபோல், வெளியில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். குடை எடுத்துச் செல்லுதல், தலைக்கு தொப்பி அணிதல், கண்களுக்கு சன்கிளாஸ் பயன்படுத்துதல் போன்றவை வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும். மேலும், உடலில் காற்றோட்டம் ஏற்படும் வகையில் தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவதும் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிகளவில் தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். அதேசமயம், மதுபானங்கள், காபி, தேநீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, இளநீர், பழச்சாறு, நுங்கு போன்ற இயற்கை பானங்களை உட்கொள்வது உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கடும் வெப்ப அலை காலத்தில் பொதுமக்கள் தங்களது உடல்நலத்தை முன்னிலைப்படுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். சிறிய அலட்சியம் கூட பெரிய உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.. கங்காநகர் தெரியுமா? இந்தியாவை மிரட்டும் ஒரு விஷயம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications