மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன்! பாஜக ஆளும் மாநிலங்களையே பின்னுக்கு தள்ளிய தமிழகம்! நாம் தான் டாப் 1!
சென்னை: மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் என்பதால் அதற்கான விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தினை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசுக்கு அவர் முன் வைத்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
டுவிஸ்ட்.. சசிதரூர் “ஷாக்” - கழற்றிவிட்ட “ஜி 23”.. நேரு குடும்ப சாய்ஸான கார்கேவை ஆதரிப்பது ஏன்?

உயிர் நீர் இயக்கம்
உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் 60% குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு, கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கி வருவதற்கு தமிழ்நாடு அரசு முதல் பரிசு பெற்றுள்ளது. இதற்கான விருதினை இன்று புது தில்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கிட தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.

124.93 லட்சம் வீடுகளில்
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள 124.93 லட்சம் வீடுகளில் இதுவரை 69.14 லட்சம் வீடுகளுக்கு (55%) குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) ஆய்வுக்கூட்டத்தில் உள்ளூர் நீர் ஆதாரம் நிலையாக உள்ள ஊரகப் பகுதிகளில் ஒற்றை கிராமத் திட்டங்களை செயல்படுத்தவும், உள்ளூர் நீர் ஆதாரங்கள் நிலைத்தன்மை இல்லாத இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார்.

55.79 லட்சம் வீடுகளுக்கு
அதனடிப்படையில் தமிழ்நாடு மாநில உயிர் நீர் இயக்கத்தின் (Jal Jeevan Mission) சார்பில் மீதமுள்ள 55.79 இலட்சம் வீடுகளுக்கு பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள், ஒற்றைக் கிராமத் திட்டங்கள் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் ரூ.18,000 கோடி அளவிற்கு 42 புதிய குடிநீர் திட்டங்களும், 56 குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன.

2 ஆண்டுகள் நீட்டிக்க
உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதால், சில பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி முடிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படுவதால் உயிர் நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தினை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரிடம் தமிழ்நாடு அரசின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.