Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டம் ஒழுங்கு ..பழனிச்சாமி புகார்.. முதல்வர் பதிலடி..வெளி நடப்பு செய்த எம்எல்ஏக்கள்..அழைத்த அப்பாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நாள் தோறும் கொலை, கொள்ளை நடப்பதாகவும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். நேரமில்லா நேரத்தில் எதிர்கட்சித்தலைவர் பழனிச்சாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பட்டியலிடவே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதோடு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மக்கள் பணியாற்ற அனைவரும் அவைக்குள் வரவேண்டும் என்று சபாநாயகர் அழைப்பு விடுத்ததை அடுத்து எம்எல்ஏக்கள் அவைக்குள் வந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்றனர்.

Tamil Nadu law and order issue: AIADMK MLAs walk out from TamilNadu assembly

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். கே.என்.நேரு, அமைச்சர், மா.சுப்ரமணியன், செந்தில் பாலாஜி ஆகியோர் தங்களின் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில்களை அளித்தனர்.

இதனையடுத்து பூஜ்ஜியம் ஹவர் எனப்படும் நேரமில்லா நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆளும் கட்சியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டினார்.

Tamil Nadu law and order issue: AIADMK MLAs walk out from TamilNadu assembly

சாலிகிராமத்தில் திமுக கூட்டத்தில் பங்கேற்க பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். பெண் காவலருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். திமுக ஆட்சி காலத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

Tamil Nadu law and order issue: AIADMK MLAs walk out from TamilNadu assembly

அதிமுக ஆட்சி காலத்தில்தான் சாத்தான்குளம் லாக்அப் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக முதல்வர் ஸ்டாலின் பட்டியல் இட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

வெளி நடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் தினந்தோறும் கொலை, கொள்ளை பிரச்சினைகள் அரங்கேறி வருகின்றன. செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் அதுவே நாள்தோறும் தலைப்புச் செய்தியாக வருகிறது. இதனைத்தான் சட்டசபையில் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

சாலிகிராமத்தில் பெண் காவலர்களுக்கு திமுகவினர் பாலியல் தொல்லை கொடுத்தனர். தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும். அதைத்தான் சட்டசபையில் முன் வைத்தோம்.

சட்டம் ஒழுங்கு ரொம்பவே கெட்டு போய் விட்டது. அதைத்தான் இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுகிறது. தமிழ்நாடு போதை பொருள் சந்தைகளமாக மாறியுள்ளது. கடல்வழியாக போதைப்பொருள் கடத்தல் சம்பவம் அரங்கேறி வருகிறது. போதைப்பொருள் பல்வேறு வடிவத்திலே வந்து கொண்டிருக்கின்றன.சட்டசபையில் எங்களுடைய பேச்சு பதிவு செய்யப்படுவதில்லை எனவேதான் அதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்று கூறினார்.

வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவைக்கு வரவேண்டும் . மக்களுக்காக பணியாற்ற அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்குள் வரவேண்டும் என்று என சபாநாயகர் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்குள் வந்து நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+