சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! பிப். 16ம் தேதி முதல் நர்சரி, மழலையர் வகுப்பு, பொருட்காட்சிக்கு அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் நர்சரி, மழலையர் பள்ளி, விளையாட்டு பள்ளிகள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான தடை தொடர்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த 1ஆம் தேதி முதல் அதிகரித்து வந்தது. ஆயிரக்கணக்கில் எகிறிய கொரோனா ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரம் வரை சென்றது. இதையடுத்து தமிழகத்தில் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டன.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் என அறிவிக்கப்பட்டது. அது போல் சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

லாக்டவுன் ஓவர்.. தமிழ்நாட்டிற்கு 2 குட் நியூஸ்.. இப்படியே போனா விரைவில் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி!லாக்டவுன் ஓவர்.. தமிழ்நாட்டிற்கு 2 குட் நியூஸ்.. இப்படியே போனா விரைவில் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி!

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில் அந்த உத்தரவுகள் திரும்ப பெறப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.

இரவு நேர ஊரடங்கு

இரவு நேர ஊரடங்கு

இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் திறப்பு தவிர மற்ற கட்டுப்பாடுகள் அப்படியே உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வரும் 15 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கில் தளர்வுகள்

ஊரடங்கில் தளர்வுகள்


தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் 16 ஆம் தேதி முதல் நர்சரி, மழலையர், விளையாட்டுப் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். இறப்பு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் நர்சரி பள்ளிகளை திறக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மேலும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது. மேலும் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஆட்கள் கலந்து கொள்ளும் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பொருட்காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமுதாய, கலாச்சார, அரசியல் நிகழ்வுகளுக்கான தடைகள் தொடர்கிறது. அது போல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கையை பயன்படுத்துவதற்கான தடையும் நீடிக்கிறது.

English summary
CM Stalin chairs meeting with officials about relaxations on Corona lockdown measures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X