தமிழக ஊரடங்கு தளர்வுகள்.. எங்கெல்லாம் பேருந்துகள் ஓடும்.. எந்த மாவட்டத்திற்கு என்னென்ன தளர்வுகள்!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்க அரசு அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் கடைகள் திறப்பு நேரத்தையும் வகை ஒன்றில் உள்ள மாவட்டங்களில் அரசு அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக தினசரி பாதிப்பு 6 ஆயிரம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை இந்த வாரம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு
ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒரு முறை ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தளர்வுகள், கட்டுப்பாடுகளை அறிவிப்பார். அந்த வகையில் ஊரடங்கு வரும் 27ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், "மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டன. அதன்படி வகை 1 - (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வகை 2 - (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 - (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்

வகை 2ல் பேருந்து
வகை 2ல் உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு பேருந்து சேவைக்கு அனுமதி அளித்துள்ளார். இதை கடைகள் திறப்பு நேரம் இரவு 7 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறக்கலாம்
வகை ஒன்றில் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இந்த முறை கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளார், இந்த 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை இரவு 7மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி அளித்துள்ளார். ஹார்டுவேர் கடைகள் இரவு 9மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்சாதன கடைகள், பாத்திர கடைகள், டிவி, மிக்ஸி கிரைண்டர் விற்பனை கடைகள் என பல்வேறு வகையான கடைகள் இரவு 7மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன அனுமதி
வகை 3ல் உள்ள சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள் செயல்படலாம். திரைப்படங்கள், சீரியல்கள் படப்பிடிப்பு நடத்தலாம். திரைப்பட படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications