தமிழகத்தில் மீண்டும்...எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல்...கடம்பூர் ராஜூ விருப்பம்!!
சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் பெற்று மீண்டு வந்து, தமிழகத்தில் அவரது குரல் ஒலிக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Recommended Video
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஆயிரக்கணக்கான பாடல்களை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த அடிமை பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை பாடி இருந்தார். இந்தப் பாடலின் மூலம் புகழ் அடைந்தார். இவரது குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை. இவருக்காக தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கே நேரடியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். அவர் நலம் பெற்று வந்து மீண்டும் அவரது குரல் தமிழகம் எங்கும் ஒலிக்க வேண்டும்'' என்றார்.
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மருத்துவ அறிக்கையில், தொடர்ந்து வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications