தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை...ரேண்டம் எண்... வெளியீடு!!
சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் வெளியிடப்பட்டது. பி.இ. படிப்புக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருக்கும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்களுக்கும் இன்று சம வாய்ப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழு மூலம் மாநிலத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பி.டெக்., பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சேருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவு நடைமுறைகள் நடந்தன. இதன் மூலம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவா்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்கள் ஏற்கனவே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர்.
சான்றிதழ்களை ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழு செய்திருந்தது. இதன்படி 1,11,436 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்தனர்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு மீண்டும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதையடுத்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவா்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். இதன்படி, விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருக்கும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவா்களுக்கும் இன்று சம வாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் மாணவா்களுக்கான சமவாய்ப்பு எண்களை வெளியிட்டார். பின்னர் பேட்டியளித்த அவர் செப்டம்பர் 17 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
ரேண்டம் நம்பரை எவ்வாறு செக் செய்வது:
- TNEA 2020ன் அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்லவும்
- மாணவர்கள் லாக் இன் பேஜ் செல்லவும்
- இதில் இ மெயில் ஐடி/லாக் இன் ஐடி/பாஸ்வேர்டு மற்றும் captcha code பதிவு செய்யவும்
- ரேண்டம் நம்பர் ஸ்கிரீனில் கிடைக்கும்
இதை சேமித்து வைத்துக் கொள்ளவும். இதன் மூலம் கவுன்சிலிங் தேதி என்றைக்கு என்பதை அறிந்து கொள்ளலாம்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications