Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தென்னாடுடைய சிவனே போற்றி.." சின்ன வயசு கனவு, நனவாகிடுச்சி.. நெகிழும் முதல் பெண் ஓதுவார் சுஹாஞ்சனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்ட சுஹாஞ்சனா, தனது பணியை தொடங்கினார். கோவிலில் இறைவனுக்காக பாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

Recommended Video

    தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகராக Suhanjana | Oneindia Tamil

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் கோவில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதியினை சேர்ந்த 24 அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.

     முதல் பெண் ஓதுவார்

    முதல் பெண் ஓதுவார்

    இதில் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக பணிபுரிய முதல் முறையாக சுஹாஞ்சனா என்ற பெண் நியமிக்கப்பட்டார். 28 வயதேயான இந்த பெண் ஓதுவராக நியமிக்கப்பட்டுள்ளது பரவலான பேசு பொருளாக மாறியது. தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் கணவர் கோபிநாத். இன்ஜினியராக உள்ளார். இந்த தம்பதியின், மகள் வன்ஷிகா சக்தி. மாமனார் பரமசிவம், மாமியார் லட்சுமி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார் சுஹாஞ்சானா.

    பெண் ஓதுவார் பேட்டி

    பெண் ஓதுவார் பேட்டி

    முதல்வரிடம் பணி நியமன ஆணையை பெற்ற சுஹாஞ்சனா, நேற்று மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் தனது ஓதுவார் பணியை தொடங்கினார். முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டது பற்றி அவர் கூறியதாவது: எங்கள் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம். நான் 10ம் வகுப்பு முடித்த பின்னர் தேவாரம் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டேன். இசைப்பள்ளியில் பயின்றுள்ளேன்.

    சிறு வயது ஆர்வம்

    சிறு வயது ஆர்வம்

    நான் சிறுவயதிலிருந்தே பக்தி பாடல்களைப் பாடுவேன். ஒவ்வொரு முறையும் நான் கோவில்களுக்குச் செல்லும் போது, பூஜைகளின் போது சுவாமி முன்பாக ஆண்கள் பாடுவதை பார்த்துள்ளேன். அது பாரம்பரியமாகவும் இருந்தது. நான் எப்போது அதைச் செய்ய முடியும் என்று யோசித்தேன். பத்தாம் வகுப்பு முடிந்ததும், நான் என் பெற்றோரிடம் இதுபற்றி சொன்னேன். அவர்கள் என் ஆர்வத்தைத் தொடர என்னை அனுமதித்தனர். நான் கரூர் சுவாமிநாத அய்யாவிடம் மூன்று ஆண்டுகள் தேவாரம் மற்றும் திருவாசகம் கற்றுக்கொண்டேன். நான் அதை 2013ல் நிறைவு செய்தேன். கரூரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு திருவாசகம் மற்றும் தார்மீக வகுப்புகளை கற்பித்தேன், என்கிறார் நெகிழ்ச்சியோடு.

    நன்றி தெரிவிக்கும் ஓதுவார்

    நன்றி தெரிவிக்கும் ஓதுவார்

    பெண்கள் பல துறையில் பயணித்தாலும், ஓதுவராகவும் பணியாற்றவில்லை என்பதால், இதில் ஆர்வமாக விண்ணப்பித்து சேர்ந்து உள்ளேன். கோவிலில் இறைவனுக்காக பாடுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த பணியை வழங்கிய முதல்வருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

    தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    இதனிடையே, கோவிலில் இவர் பாடும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. "தென்னாட்டுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.." என்று துவங்கும் திருவாசக பாடலை, இறைவனை நோக்கி சன்னதியில் நின்று சுஹாஞ்சனா பாடும் அந்த வீடியோ காட்சி, நெகிழ்ச்சியாக உள்ளது. இனிமையான குரல் மட்டுமல்ல, எதையும் நோக்காமல், இறைவன் சன்னதியை மட்டுமே நோக்கி ஒரு யோக நிலையில் நின்றபடி அவர் பாடும் பாடல் அவரது இசை வளமையை மட்டுமல்லாது, பக்தி நெறியையும் பறைசாற்றுவதாக உள்ளது.

    கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை

    கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை

    தமிழ்நாட்டில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் கடந்த 1970ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது 51 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+