"இந்தியாவிலேயே முதலிடம்".. நீட் தரவரிசையில் சாதித்த தமிழக பட்டியலின மாணவர்! யார் இந்த ரஜனீஷ்?
சென்னை: கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேசிய முகமை சார்பில் திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று இந்தியாவில் 17 பேர் முதலிடம் பிடித்துள்ளன நிலையில் தமிழகத்தை சேர்ந்த பட்டியலின மாணவர் ரஜனீஷ் என்பவரும் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார். இதில் முதல் 100 இடங்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
நம் நாட்டில் மருத்துவ படிப்புக்கு நீட் எனும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது நடத்தப்பட்டது.

மொத்தம் 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடந்த இந்த தேர்வை 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடந்தது. அதன்பிறகு ரிசல்ட் வெளியானது.
இதற்கிடையே தான் முறைகேடு புகார் எழுந்தது. மாணவ-மாணவிகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் சர்ச்சை வெடித்தது. இதனால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆனால் தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்ய விரும்பவில்லை. உச்சநீதிமன்றமும் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூறிவிட்டது.
இதையடுத்து கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு இளநிலை மருத்துவ படிப்புக்கான மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில்தான் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வின் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. இந்த தரவரிசை பட்டியலில் 17 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதில் 4 பேர் மாணவிகள், 13 பேர் மாணவர்கள்.
இதில் முதலிடம் பிடித்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த பட்டியலின மாணவரும் ஒருவர். 4131040542 என்ற பதிவு எண்ணில் தேர்வு எழுதிய பி ரஜனீஷ் என்ற மாணவர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். மேலும் முதல் இடத்தில் 17 மாணவ-மாணவிகளில் பி ரஜனீஷ் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர். மற்ற 16 பேரில் பொதுப்பிரிவு, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக உள்ளனர்.
டாப் 100 இடங்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.. வெளியானது திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியல்
மேலும் 4101170046 என்ற பதிவு எண்ணில் தேர்வு எழுதிய தமிழகத்தை சேர்ந்த சைலஜா என்ற மாணவி தரவரிசை பட்டியலில் 38 வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் 4108080365 என்ற பதிவு எண்ணில் தேர்வு எழுதிய ஜெயதி பூர்வஜா என்ற மாணவி இந்திய அளவில் 66வது இடம் பிடித்து அசத்தி உள்ளார். மொத்தமாக டாப் 100 இடங்களை எடுத்து கொண்டால் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் இருந்து 1.52 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில் 89,198 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மற்றவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இந்த திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை மாணவர்கள் exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளம் மூலம் பார்த்து கொள்ளலாம். தற்போது இளநிலை மருத்துவ படிப்புக்கான திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதன் அடிப்படையில் கவுன்சிலிங் என்பது தொடங்கி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications