Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாண்டுகளுக்கு ஹாப்பி நியூஸ்.. கொளுத்தும் வெயில்.. கோடை விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் சொன்ன தகவல்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்திருக்கும் நிலையில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் கோடை விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12ஆம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 18ஆம் தேதி தொடங்கியும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 25ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tamil Nadu School Anbil Mahesh

ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறையால் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள் கோடை விடுமுறை முடிவடைந்து திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் 13 நாட்கள் தாமதமாக அதாவது ஜூன் 15ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது இந்த ஆண்டு எப்படி கோடை விடுமுறை நீட்டிப்பு இருக்கும் என தெரியவில்லை. அதே நேரத்தில் வேலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை கூறியிருக்கும் நிலையில் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி இருக்கிறார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி," தமிழக முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. திருச்சியில் கூட 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை அதிகரித்ததை பார்த்தேன். ஏற்கனவே ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து கோடை விடுமுறையை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு கடந்த ஆண்டு போலவே விடுமுறை நீட்டிக்க படலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+