‛‛பழைய பஸ் பாஸ் போதும்’’.. பள்ளி மாணவர்கள் அரசு பஸ்ஸில் இலவசமாக பயணிக்கலாம் - போக்குவரத்து துறை
சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் ஜுன் 6ல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி மாணவ-மாணவிகள் பழைய பஸ் பாஸ் காண்பித்து அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் கடைசி மற்றும் மே தொடக்கத்தில் கோடை வெயில் கொளுத்து எடுத்தது. பல இடங்களில் வெப்ப அலை வீசியது.

இதனால் வெயில் மற்றும் லோக்சபா தேர்தல் முடிவு (ஜுன் 4ம் தேதி வெளியாகிறது) ஆகியவற்றை கருத்தில் கொண்டு கோடை விடுமுறைக்கு பிறகு 2வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
ஆனால் கடந்த 3 வாரமாக தமிழ்நாட்டில் கோடை வெயில் முற்றிலுமாக குறைந்தது. அதோடு கோடை மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் பள்ளி கல்வித்துறை தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டது. அதன்படி கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 6ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க சாத்தியமில்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பழைய பஸ் பாஸ், பள்ளி அடையாள அட்டை அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளது. தமிழகத்தில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்டுத்திக்கொள்ள போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications