சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் .. பெரிய சரிவு இல்லை.. அப்படியே தொடரும் பாதிப்பு !

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2,447 பேர் ஒரே நாளில் மீண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துவிட்டது.

தமிழகத்தில் இனறைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை
25,48,497 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 2,447 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24,91,222 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு


தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 22 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,911 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 23 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணக்கை 24,025ல் இருந்து 23,364 ஆக சரிந்தது

எவ்வளவு

எவ்வளவு

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 169 பேரும். ஈரோட்டில் 130 பேரும், சென்னையில் 126 பேரும், சேலத்தில் 105 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழாக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2133 பேர் உள்ளனர். சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், தஞ்சாவூரில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உள்ளது.

English summary
In Tamil Nadu today, 1,808 people have been affected by the coronavirus. At the same time 2,447 people recovered from the corona impact in a single day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X