தமிழகத்தில் சற்றே உயர்ந்த கொரோனா பாதிப்பு... சென்னையில் 194 பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 619 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 27,45,261 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா சிக்கி தவித்து வருகிறது. 2020 ஜனவரி மாதம் முதல் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரு ஆண்டுகளில் மிக தீவிரமான பரவல் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. அரசியல் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியது.

அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று கடந்த 5 நாட்களை விட சற்றே அதிகரித்துள்ளது

 இன்றைய கொரோனா பாதிப்பு

இன்றைய கொரோனா பாதிப்பு

இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்திர்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,45,261 ஆக உயர்ந்துள்ளது.

 குணமடைநதவர்கள் எண்ணிக்கை

குணமடைநதவர்கள் எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று மட்டும் 638 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,01,974ஆக உயர்ந்துள்ளது.

 7 பேர் உயிரிழப்பு

7 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 சென்னையில் பாதிப்பு

சென்னையில் பாதிப்பு

சென்னையில் இன்று 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் சென்னையில் பாதிப்பு 146 ஆக இருந்த நிலையில், சிறிது சிறிதாக பாதிப்பு அதிகரித்து இன்று 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்றே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+