இடி மின்னலுடன் இரவில் வெளுக்கும் மழை.. கேடிசிசி மக்கள் கவனம்.. வெதர்மேன் அலர்ட்
சென்னை: கேரளாவில் பருவமழை குறைந்து, தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இரவில் கேடிசிசி பகுதியில் மழை பெய்யும் எனவும் பதிவிட்டுள்ளார்.
வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னதாக அறிவித்து இருந்தது.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யுமென்றும், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஊர்களில் கடந்த 2 நாட்களாக வெப்பம் தகித்தது. 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவானது. இந்த நிலையில் இன்று மாலை நேரத்தில்
மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
https://twitter.com/praddy06/status/1678373268745510912
வானிலையின் திடீர் மாற்றம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் பருவமழை குறைந்து, தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் கேடிசிசி எனப்படும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மழை பெய்யும் எனவும் பதிவிட்டுள்ளார். இந்த மாவட்ட மக்கள் இரவு நேர பயணத்தின் போது குடை, ரெயின்கோட் கட்டாயம் வைத்துக்கொள்வது அவசியம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications