தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா!
சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழ.நெடுமாறன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட பின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பழ.நெடுமாறன் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பழ.நெடுமாறன் விரைவில் குணமடைய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தமிழர் தேசிய முன்னணித் தலைவரும், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடியும், குரல் கொடுத்து வருபவருமான அய்யா திரு. பழ.நெடுமாறன் அவர்களுக்கு #Covid19 உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அறிந்து வேதனைக்கு உள்ளானேன்.அய்யா அவர்கள் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று கூறியுள்ளார்.
சீமான் தனது டுவிட்டரில், 'தமிழ்ப்பேரினத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பெருமதிப்பிற்குரிய ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவரும் செய்தியறிந்தேன். ஐயா முழுமையான உடல்நலம்பெற்று மீண்டும் இனமானப்பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications