தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்.. திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கோலிவுட் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளம் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களை அதிகபட்சம் அன்றைய தினமே இணையதளத்தில் வெளியிடுவதால் மக்கள் பெரும்பாலும் தியேட்டருக்கு செல்லாமலேயே இணையதளத்தில் டவுன்லோடு செய்து பார்த்து வந்தனர்.
இதனால் திரைத்துறையினருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. தமிழ் ராக்கர்ஸின் இந்த அதிரடி ஆக்ஷனுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட எந்த நடிகரும் தப்பவில்லை.

தகவல்கள் தெரியவில்லை
இந்த நிலையில் இந்த இணையதளத்தை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த இந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி போயின. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின் போதும் நடிகர் விஷால் திரைத்துறைக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குவோம் என வாக்குறுதி அளித்து அந்த தலைவர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இணையதளம்
ஆனால் இந்த பதவிக்காலம் முழுவதும் இணையதளத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் விஷாலால் முடியவில்லை. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் மிஷ்கின் என பலரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் முடக்கும் என தெரிவித்திருந்தனர்.

மகிழ்ச்சி
இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குவதாக அந்த இணையதளமே அறிவித்துள்ளது. இதற்கான காரணம் என்னவென தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இந்த அறிவிப்பால் திரைத்துறையினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வருத்தம்
ஆனால் பொதுமக்களோ இனி மொக்கை படமாக இருந்தாலும் தியேட்டருக்குத்தான் போகணுமா என கன்னத்தில் கைவைத்தபடி வருத்தத்தில் உள்ளனர். இணையதளவாசிகள் இத்தனை நாள் செய்த சேவைக்கு நன்றி என தமிழ் ராக்கர்ஸுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications