சென்னையில் ’கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி.. இந்த நடிகையா? ஷாக் ஆன ரசிகர்கள்! என்னாச்சு?
சென்னை: சென்னையில் பிரபல சீரியல் நடிகையான அமுதா குடும்ப தகராறு காரணமாக வீட்டில் இருந்த ஃபினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விருகம்பாக்கம் போலீசார்.
சினிமாவிலும் சரி சீரியலிலும் சரி நடிகைகள் தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகளை எடுப்பது அதிகரித்து வருவது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்திருக்கிறது. தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகை அமுதா இன்று வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விருகம்பாக்கம் பகுதியில் அவரது கணவருடன் வசித்து வரும் நிலையில் இருவர் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இன்றும் தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த அமுதா வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா












Click it and Unblock the Notifications