அ முதல் ஃ வரை.. மக்களின் லேட்டஸ்ட் செல்ஃபி ஸ்பாட்.. கத்திப்பாரா மேம்பாலம்! "ஜொலிக்கும்" அன்னை தமிழ்!
சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் அ முதல் ஃ வரை தமிழ் எழுத்துகள் அலங்கரித்து வருகின்றன. இது பொதுமக்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளன. இரவு நேரத்தில் லைட்டிங்கில் இந்த எழுத்துகள் அருமையாக காணப்படுகிறது.
Recommended Video
திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா தொடங்கப்பட்டு அங்கு தமிழகத்தின் பாரம்பரிய விஷயங்கள் பறைசாற்றப்படுகின்றன. தமிழ் என்றாலே கருணாநிதி என்பதற்கேற்ப அவரது ஆட்சியில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அந்த வகையில் சிங்கார சென்னை 2.o-வின் ஒரு பகுதியாக சென்னையின் கிண்டி- கத்திப்பாரா பாலத்தில் தமிழ் எழுத்துகள் அலங்கரித்துள்ளன. அ முதல் ஃ வரை உலோகத்தில் பொறிக்கப்பட்டு மின்னொளியில் மிளிர்கிறது.

குழந்தைகள்
இந்த வழியாக செல்வோர் மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அது போல் குழந்தைகளும் பள்ளியில் படித்த உயிரெழுத்துகளை நினைவுப்படுத்தி வருகிறார்கள். அது போல் ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, கோயம்பேடு, பூந்தமல்லி சாலைகளை இணைக்கும் கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

வண்ண ஓவியங்கள்
இந்த சதுக்கத்தில் ஒரே நேரத்தில் 25 பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக்கு இட வசதி பெருகியுள்ளது. அதுபோல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் உள்ளது. வண்ண ஓவியங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா, உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இயற்கையான சூழல்
மேலும் இங்கு இயற்கையான சூழலை ஊக்குவிக்கும் வகையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டுள்ளன. இந்த பூங்கா 5.38 லட்சம் சதுர அடியில் இந்த சதுக்கம் அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரியும் பெரியவர்களும் வீட்டிலிருந்தே படிக்கும் குழந்தைகளும் இளைப்பாற சரியான இடம் இது எனலாம்.

நிறைய மாற்றங்கள்
சென்னையில் கண்களுக்கு குளிர்ச்சியாக நிறைய மாற்றங்கள் ஏற்படும் என தெரிகிறது. இந்த மாற்றங்களை ரசிக்கும் மக்கள், மழைகாலங்களில் தண்ணீரில் மிதக்காத சென்னையை கட்டுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். அதுவும் இனி வருங்காலங்களில் அமையும் என தெரிகிறது.
-
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications