சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் கம்பீரமான காட்சி.. சென்னை ரிப்பன் மாளிகையில் பொறுத்தப்பட்டது 'தமிழ் வாழ்க' பெயர் பலகை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையின் மேல்தளத்தில் மீண்டும் 'தமிழ் வாழ்க' மற்றும் 'தமிழ் வளர்க' பெயர் பலகை வைக்கப்பட்டது. தமிழ் அடையாளத்துடன் பழையபடி கம்பீரமாக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை காட்சி அளிக்கிறது. இந்த புகைப்படங்கள் இணைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இருந்து " தமிழ் வாழ்க " பெயர் பலகையை நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. தமிர் வாழ்க புகைப்படங்கள் இருந்தது. இல்லாது ஆகிய புகைப்படங்களை ஒப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் குறித்து பலரும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக பதில் அளித்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர், பெயர் பலகை இப்போது நீக்கப்படவில்லை. வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்றார்.

பலகை உடைந்தது

பலகை உடைந்தது

இதுபற்றி அவர் கூறும் போது " அந்த பதாகை 2009ல் எடுக்கப்பட்டது. 2009ம் ஆண்டு டிசம்பரில் JNNURM நிதி வழியாக ரிப்பன் கட்டிடம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பொழுது அந்த பதாகை நீக்கப்பட்டது. யாரோ பழைய புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் இப்பொழுது எடுத்தது போல் தவறாக பரப்புகிறார்கள். அந்த பலகை உடைந்து விழும் நிலையில் பழுது அடைந்த காரணத்திற்காகவே அகற்றப்பட்டது" என்றார்.

தமிழ் வாழ்க புகைப்படம்

தமிழ் வாழ்க புகைப்படம்

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரி சொன்னது போல் 2009ல் புகைப்படம் நீக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. எனினும் கடந்த 3 ஆண்டுகளாக எடுத்த புகைப்படங்களில் தமிழ் வாழ்க புகைப்படம் சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் இல்லை.

அரசு முடிவு

அரசு முடிவு

இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மீண்டும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தமிழ் வாழ்க பெயர் பலகையை பொறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் நடந்து வந்தன.

கம்பீரமான காட்சி

கம்பீரமான காட்சி

இன்று பழைய படி சென்னை ரிப்பன் மாளிகையின் மேல்தளத்தில் மீண்டும் தமிழ் வாழ்க மற்றும் தமிழ் வளர்க பெயர் பலகை வைக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சி கட்டிடம், தமிழ் அடையாளத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

English summary
The name board of 'Tamil Vaalga' and 'Tamil Valarka' was again placed on the roof of the Ribbon House in Chennai. The Ribbon House, the Chennai Corporation office, is as majestic as ever with its Tamil identity. These photos are going viral on websites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X