அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வு! இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?தமிழிசைக்கு வந்த கோபம்
சென்னை : அம்பேத்கரோடு பிரதமர் நரேந்திரமோடியை இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பிட்டு பேசியது சர்ச்சையான நிலையில், இளையராஜாவின் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? என தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார்.
அதில், "அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

இளையராஜா சர்ச்சை
மேலும்" பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயன்று இருக்கிறது. பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்து இருப்பதால் கிராமபுற பெண்கள் படிப்பை தொடர முடியும். இலவச எரிவாயு திட்டம், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களே நினைவுக்கு வருகின்றன.
Recommended Video

பெரும் விவாதம்
குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தாலும் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். எனவும் கூறியிருந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் ஆதரவு ஒரு புறம் எதிர்ப்பு என இளைராஜாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் நடைபெற்று வருகின்றன.

தமிழிசை கேள்வி
இந்நிலையில் இளையராஜாவின் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? என தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்
மேலும், " தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே எனவும் பதிவிட்டுள்ளார். அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " இசைப் பிரபலங்களின் தலைசிறந்த ஜாம்பவான் திரு.இளையராஜா தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெருமை என்றும், அவரை விமர்சித்தவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." எனவும் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications