தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் ரூ.102ஐ தாண்டிய பெட்ரோல் விலை.. போபாலில் ரூ.110க்கு பெட்ரோல் விற்பனை
சென்னை: இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து தமிழ்நாட்டில் 101 ரூபாய்க்கும் அதிகமான விலையிலேயே பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 70 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் வேகமாக உயர்ந்து தற்போது 100 ரூபாயை தாண்டிவிட்டது. கடைசியாக 2019 நவம்பரில் விராட் கோலி சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தார். அப்போது பெட்ரோல் விலை சென்னையில் 70 -75 ரூபாய் இருந்தது.

அவர் இன்னும் அடுத்த சதம் அடிக்கவில்லை. அதற்குள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சதம் அடித்துவிட்டது.சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சமயங்களில் குறையும் சமயங்களில் கூட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விழா 103 ரூபாயை தாண்டிவிட்டது.
இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 101.92 ரூபாய்க்கு விற்பனை.சென்னையில் டீசல் விலை 94.24 விலைக்கு விற்பனை.
34 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.102 ஐ தாண்டி உள்ளது. ஈரோடு,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை,சேலம்,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, அரியலூர், கோவை, கடலூர்,தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், திண்டுக்கல், , நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை 102-103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் விலை 101.19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 89.72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 102.32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 104.75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 95.99 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 107.56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97.16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு டீசல் விலை 98.69 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தினமும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம் என்று விதி கொண்டு வந்த பின் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் அவதிப்படும் போதும் கூட பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications