10 ஆண்டு பிளான்.. இனி சட்டசபையில் என்ன நடந்தாலும் பார்க்கலாம்.. முதல்வரின் முக்கிய "லைவ்" திட்டம்!
சென்னை; 2022 தமிழ்நாடு சட்டசபை முதல் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான முதம் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ந்தேதி கூடுகிறது. கொரோனா தாக்கத்தால் கடந்த 2 வருடங்களாக சென்னை கலைவானர் அரங்கத்தில் பேரவைக் கூட்டம் நடந்து வந்தது.
இந்த நிலையில் இனி தலைமைச்செயலகத்திலுள்ள சட்டப்பேரவை அரங்கில் தொடர்ச்சியாக நடக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் பேரவைச் செயலகம் செய்து முடித்திருக்கிறது.

சிறப்பு ஏற்பாடு
காகிதமில்லா பேரவையை நடத்திச் செல்வதால் ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் கணிணி பொறுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த பட்ஜெட் போல இந்த முறையும் கூட்டத்தொடரில் பேப்பர் எதுவும் பயன்படுத்தப்படாது. எம்எல்ஏக்கள் எல்லோருக்கும் சிறிய அளவிலான டேப்லேட் அளிக்கப்பட உள்ளது.

நேரடி ஒளிபரப்பு
தவிர, பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் முடிவில் திமுக அரசு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது பேரவைச் செயலகம். அதேசமயம், திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றும் முகமாக நேரடி ஒளிபரப்பில் அரசு கவனம் செலுத்துகிறது.

தேர்தல் அறிக்கை
ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவோம் என்று திமுக அறிவித்து இருந்தது. ஆனால் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றதால் இந்த நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதில் சிக்கல் இருந்தது. ஆனால் இந்த முறை கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்க உள்ளது.

அறிவித்தார்
கடந்த முறையே சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வந்தோம். இப்போது நாங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம். ஜார்ஜ் கோட்டையில் கூட்டம் நடக்கும் போது கண்டிப்பாக அதை லைவ் ஒளிபரப்பு செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த கூட்டத்தொடரிலேயே அறிவித்து இருந்தார்.
Recommended Video

ஆர்வம்
இந்த நிலையில்தான் இந்த முறை சட்டசபை லைவாக ஒளிபரப்பப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நேரடி ஒளிபரப்பில் சபாநாயகர் அப்பாவுவும் ஆர்வமுடன் இருக்கிறார். அதற்கேற்ப நாங்கள் எல்லா ஏற்பாடுகளுடன் தயாராக இருக்கிறோம். அதேசமயம், முதலமைச்சர் இதற்கு இசைவு தெரிவித்ததும் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் '' என்கின்றனர் செயலக அதிகாரிகள் தரப்பினர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications