சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக பட்ஜெட் 2019: அண்ணா பல்கலை.க்கு ஜாக்பாட்.. ரூ.100 கோடியை ஒதுக்கிய அரசு!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    8-ஆவது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்- வீடியோ

    சென்னை: கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில் தமிழக சட்டசபையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    Tamilnadu Budget 2019: Anna University will get Rs.100 Cr from TN govt to improve infrastructure

    விவசாயம் தொடங்கி பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்றது. அதன்படி,
    அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிற்றல் கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் மத்திய அரசு நிதி தரவில்லை.நிதி உதவி கிடைக்காவிட்டாலும் தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    2019-20ம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறைந்த செலவில் தரமான உயர் கல்வி பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் 29 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரி துவங்க அனுமதி வழங்கியுள்ளோம்.

    2019-20ம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும். முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த 460.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    சர்வதேச தரத்திற்கு கல்வி நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்த தனியார் பல்கலை. நிறுவும் சட்டத்தை இயற்றியுள்ளோம். அரசு பல்கலை. உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

    கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலை.க்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கப்படும். உயர் கல்வித்துறைக்கு ரூ.4584.21 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், என்று நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

    English summary
    Tamilnadu Budget 2019: Anna University will get Rs.100 Cr from TN govt to improve infrastructure says Minister O Paneerselvam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X