கையில் பெரியார் சிலை.. முதல்வர் கூறுவதை க்யூட்டாக கேட்கும் 5வயது சிறுவன்.. போட்டோ வைரல்.. என்ன ஆச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பெரியார் குறித்துக் கூறுவதை க்யூட்டாக கேட்கும் 5 வயது சிறுவனின் புகைப்படம் நேற்று ட்விட்டரில் வைரலானது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்முறையாகத் தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றார்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்த சமயத்தில் கொரோனா 2 ஆம் அலை மாநிலத்தில் உச்சத்தில் இருந்தது. ஒரு மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர்

சட்டசபை கூட்டத்தொடர்

அதைத் தொடர்ந்து 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு நன்றியுரை ஆற்றிய ஸ்டாலின், திமுக நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான் என்றும் தான் அண்ணா மற்றும் கருணாநிதியின் வாரிசு என்றும் முழங்கினார். மேலும், பெரியார் நினைவு சமத்துவபுரம், ஆலய புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

இப்படி அரசியல் பரபரப்புகளுக்கு இடையே நேற்றிரவு முதல்வர் ஸ்டாலின் சிறுவன் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. இந்தப் படத்தை திமுக இளைஞரணி செயலரும் சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அவர் பகிர்ந்த சற்று நேரத்திலேயே முதல்வர் கூறுவதை ஆர்வமாகக் கேட்கும் அந்த சிறுவனின் புகைப்படம் வைரலானது.

பெரியார் சிலை

பெரியார் சிலை

அந்தப் படத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது கையில் பெரியார் சிலையை வைத்திருக்கிறார். பெரியார் குறித்து முதல்வர் கூறுவதை க்யூட்டாக அந்த சிறுவன் கேட்கிறான். முதல்வருடன் அந்த க்யூட் சிறுவன் இருக்கும் புகைப்படம் தான் நேற்று மாலை சமூக வலதைத்தளங்களில் வைரல். அச்சிறுவனுக்கு முதல்வர் ஸ்டாலின் பெரியார் சிலையை ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.

யார் அந்த சிறுவன்

யார் அந்த சிறுவன்

கொளத்தூரைச் சேர்ந்த டாக்டர் பார்த்தசாரதி- டாக்டர் கலையரசி தம்பதியின் மகன் அந்த படத்தில் இருக்கும் சிறுவன். 5 வயதே ஆகும் சாய் சித்தார்த் 928 Colour Cubes-ஐ கொண்டு முதல்வர் ஸ்டாலினின் உருவப்படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார். இதற்காகவே முதல்வர் ஸ்டாலின் அந்தச் சிறுவனை நேரில் அழைத்து நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

முன்னதாக சாய் சித்தார்த்கை திமுக இளைஞரணி செயலர் உதயநிதியும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அச்சிறுவனுக்கு சிறிய கோப்பை ஒன்றையும் அளித்து உற்சாகப்படுத்தியுள்ளார் உதயநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+