சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தை மிரட்டும் கொரோனா.. இன்று 508 பேர் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் பலியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவியது எப்படி.. முழு பின்னணி!

    இன்று பாதிக்கப்பட்டவர்களில் 353 பேர் ஆண்கள், 154 பேர் பெண்கள் என்று சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்திலேயே, அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 279 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

    சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம் தெரியுமா? எடப்பாடியார் விளக்கம் இதுதான்சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம் தெரியுமா? எடப்பாடியார் விளக்கம் இதுதான்

    சென்னை நிலவரம்

    சென்னை நிலவரம்

    சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1779 இல் இருந்து 2008 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள். தமிழகத்தில் இன்று கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை என்பது 33 ஆக உயர்ந்துள்ளது.

    டெஸ்ட் அதிகம்

    டெஸ்ட் அதிகம்

    இன்று, ஒரே நாளில் தமிழகத்தில் சிகிச்சை பெற்ற 76 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 858 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 828 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளது.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    10 வயதுக்கு உட்பட்ட 20 குழந்தைகளுக்கு இன்று தோற்று உறுதி செயப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மாற்று பாலினத்தவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் இரண்டு மூன்றாம் பாலினத்தவர் கொரோனா வைரஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    முதல்வர் பேச்சு

    முதல்வர் பேச்சு

    தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது. இதில் 36 அரசு லேப்கள். 16 தனியார் லேப்கள். தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவோர் எண்ணிக்கை, 3,198 பேர் என்று, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று மாலை 6 மணியளவில் டிவியில் தோன்றி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிக பரிசோதனைகள் எடுக்கப்படுவதால், அதிக பாதிப்பு தெரிவதாகவும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu series 508 new Corona virus cases on today show the states number has been increased to 4058.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X