சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

52 நாட்களுக்கு பின்.. மீள்கிறது தமிழ்நாடு.. 10% க்கும் கீழ் சென்ற கொரோனா "பாசிட்டிவ் " சதவிகிதம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் வேகமாக சரிந்து வருகிறது. 10%க்கும் கீழ் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் சென்றுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பது டிபிஆர் எனப்படும் Test positivity rateஐ வைத்து கணக்கிடப்படும். அதாவது இது கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் ஆகும்.

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயும் குழு உறுப்பினர்கள் நியமனம்: 1 மாதத்தில் அறிக்கை தர அரசு உத்தரவு நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயும் குழு உறுப்பினர்கள் நியமனம்: 1 மாதத்தில் அறிக்கை தர அரசு உத்தரவு

100 பேரை டெஸ்ட் எடுத்தால் எத்தனை பேருக்கு கொரோனா வருகிறது என்பதை பொறுத்தே பரவல் எப்படி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் 10%க்கு மேல் இருந்தால் நிலைமை மோசமாக இருக்கிறது என்று அர்த்தம்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்த நிலையில் தமிழகத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் வேகமாக சரிந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக வேகமாக தினசரி கேஸ்கள் குறைந்து வருகிறது. கொரோனா சோதனைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டாலும் கூட பாசிட்டிவ் சதவிகிதம் குறைந்துள்ளது. 10%க்கும் கீழ் கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் சென்றுள்ளது.

எப்படி

எப்படி

அதன்படி தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாசிட்டிவ் ரேட் 9.8% ஆக உள்ளது. இது 52 நாட்களுக்கு பின் ஏற்பட்ட மாற்றம் ஆகும். 52 நாட்களுக்கு பின் பாசிட்டிவ் சதவிகிதம் 10%க்கு கீழ் சென்றுள்ளது. சென்னை தவிர்த்து மற்ற தமிழ்நாடு பகுதிகளில் மொத்த டிபிஆர் சதவிகிதம் 11.2% ஆக உள்ளது. தமிழ்நாடு வேகமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருவதை இது காட்டுகிறது.

 ஆக்டிவ்

ஆக்டிவ்

தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. தினசரி கேஸ்கள் குறைந்து, டிஸ்சார்ஜ் அதிகமாகி வருவதால், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,88,664 ஆக உள்ளது. அதேபோல் டெஸ்டிங்கும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 181920 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் செய்யப்பட அதிகபட்ச டெஸ்ட் இதுதான். தமிழ்நாட்டில் ஆக்சிஜன் படுக்கைகள் 57% பயன்படுத்தப்பட்டுள்ளது, மற்றவை காலியாக உள்ளது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இன்று 171237 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2,86,90,398 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் இன்று 32049 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இன்று 16813 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 358 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28528 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

English summary
Tamilnadu positivity rate goes below 10%: After 52 days the state is recovering fast from Covid 19 surge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X