'அதிர்ச்சி..' தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. 17,121ஆக உயர்ந்த ஆக்டிவ் கேஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாநிலத்தில் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரே மாநிலத்தில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஊரடங்கிற்கு முன் 30 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த சமயத்தில் மாநிலத்திலுள்ள முக்கிய மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. அதன் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்தது.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,60,057 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கர்நாடகாவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1,745 பேருக்கு இன்று வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 81 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களாகும். இதுவரை மாநிலத்தில் மொத்தம் 26,52,115 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கடந்த சில நாட்களாகவே 1.1 ஆகவே தொடர்கிறது. அதிகபட்சமாகக் கோவையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.3%ஆக உள்ளது. அதேபோல கிருஷ்ணகிரியில் 2.2% தர்மபுரி மற்றும் திருப்பூரில் கொரோனா 2.0%ஆக உள்ளது. பா தலைநகர் சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.9%ஆக உள்ளது. தஞ்சையில் 2.4% கோவையில்

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இன்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 27 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 19 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அதிகபட்சமாக்கச் சென்னையில் 5 பேரும் தஞ்சையில் நான்கு பேரும் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 35,427 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மாநிலத்தில் 17,027 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 17,121ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,624 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,99,567 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வரியான பாதிப்பில் இன்று கோவையில் தான் அதிகமாக உள்ளது. கோவையில் இன்று மொத்தம் 226 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் 222 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 107 பேருக்கும், ஈரோட்டில் 116 பேருக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+