சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Tamil Nadu Lockdown: மீண்டும் கறிக்கடைகள் திறப்பு.. உற்சாகத்தில் மனிதர்கள்.. பீதியில், ஆடு, கோழிகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தாலும், சிக்கன், மட்டன், மீன் கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அசைவ உணவு பிரியர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Recommended Video

    June 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் Lockdown நீட்டிக்கப்படும்- Mk Stalin | Oneindia Tamil

    இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதை பாருங்கள்:

    தமிழ்நாட்டில் தற்போது நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்தபோதிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் , கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது .

    ஜுன் 7 முதல் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.. கடைகள் செயல்படலாம்.. ஸ்டாலின் அதிரடிஜுன் 7 முதல் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.. கடைகள் செயல்படலாம்.. ஸ்டாலின் அதிரடி

    11 மாவட்டங்களில் தளர்வுகள்

    11 மாவட்டங்களில் தளர்வுகள்

    இந்த மாவட்டங்களில் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

    இறைச்சி, மீன்

    இறைச்சி, மீன்

    தனியாக செயல்படுகின்ற மாளிகை பலசரக்குகள், காய்கறிகள் , இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகள் மொத்த விற்பனை மட்டும் செயல்படுத்தப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்யவேண்டும். இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

    அரசு அலுவலகம்

    அரசு அலுவலகம்

    அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் ஊழியர்களோடு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படும். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

    பிற மாவட்டங்களில் இறைச்சி, மீன் கடைகள் திறப்பு

    பிற மாவட்டங்களில் இறைச்சி, மீன் கடைகள் திறப்பு

    மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்: தனியாக செயல்படுகின்ற மாளிகை பலசரக்குகள், காய்கறிகள் , இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகள் மொத்த விற்பனை மட்டும் செயல்படுத்தப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்யவேண்டும். இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

    பிளம்பர்கள்

    பிளம்பர்கள்

    தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளில் பணியாற்றுவோர் இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவார்கள். மின் பணியாளர்கள், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

    ஹார்டுவேர், ரிப்பேர் கடைகள்

    ஹார்டுவேர், ரிப்பேர் கடைகள்

    மென்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் . ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படு அனுமதிக்கப்படும்.

    ஸ்டேஷனரி கடைகள்

    ஸ்டேஷனரி கடைகள்

    வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அளிக்கப்படும். கல்வி, புத்தகங்கள் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகன விநியோகிப்பாளர் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (அதாவது சர்வீஸ் சென்டர்கள் மட்டும் விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும்.

    இ-பதிவு அவசியம்

    இ-பதிவு அவசியம்

    வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவு செய்து செல்ல அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டாக்சியில், ஓட்டுனர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகளும் மட்டும் அனுமதிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி முதல் இத்தனை நாட்களாக மாமிச கடைகள் திறக்கப்பட அனுமதிக்காத நிலையில், அரசின் இந்த உத்தரவால், அசைவ உணவு பிரியர்கள் அளவில்லாத மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    English summary
    Tamilnadu government has extended lock down till June 14, but chicken mutton and fish shops can be open.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X