சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆவின் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்பனை செய்ய அனுமதி- தமிழக அரசு அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிப்பதாக உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Tamilnadu Government says aavin diary products will be sold in plastic

அதில், உணவு பாதுகாப்பு விதிகளில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், அலுமினியம் ஃபாயில்களில் அடைத்து விற்க அனுமதிப்பதாகவும், ஆவின் நிறுவனம் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக 33.84 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நானெல்லாம் உதைக்கிற மாட்டிலேயே வேகமாக பால் கறப்பவன்.. இது யாராலும் முடியாது.. அமைச்சர் எ.வ.வேலு கலகலநானெல்லாம் உதைக்கிற மாட்டிலேயே வேகமாக பால் கறப்பவன்.. இது யாராலும் முடியாது.. அமைச்சர் எ.வ.வேலு கலகல

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக 384 குற்ற வழக்குகள் பதியப்பட்டு, 27.62 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 363 உரிமையியல் வழக்குகளில் 54.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு எதிராக 13 குற்ற வழக்குகள் பதியப்பட்டு, 1.79 லட்சம் ரூபாய் அபராதமும், 492 உரிமையியல் வழக்குகளில் 61.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government submits report in Chennai HC that aavin diary products will be sold in plastic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X