தமிழ் மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: தமிழ் மொழி இந்தி மொழியைவிட பழமையானது; தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் திணித்துவிட முடியாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பனராஸ் பல்கலைக் கழக மாணவர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ஆளுநர் ரவி பேசுகையில், இந்தி மொழியைவிட தமிழ் மொழிதான் பழமையானது. தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறும் உண்டு. சமஸ்கிருதம் மட்டுமே தமிழ் மொழிக்கு நிகரான பழமையான மொழி. தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் திணிக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது மகிழ்ச்சியானதுதான். தமிழை முழுமையாக ஆழமாகவும் படிக்க வேண்டும். திருக்குறள் மனித சமூகத்துக்கு தேவையானது; அனைத்து தரப்பினரும் திருக்குறளை தவறாமல் படிக்க வேண்டும். திருக்குறளின் ஆழமான கருத்துகளை அனைவரும் பயிலவும் வேண்டும். திருக்குறள் போல தமிழ் இலக்கியங்கள் ஏராளமாக உள்ளன என்றார் ஆளுநர் ரவி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications