சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 நாட்கள்தான்.. IISc எச்சரித்தபடியே நடக்கிறதே! தமிழ்நாட்டில் பட்டென உயர்ந்த கொரோனா.. என்ன ஆகும்?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவல் தொடர்பாக Indian Institute of Science and Indian Statistical Institute (IISc-ISI) எச்சரித்தபடியே தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. வரும் நாட்டில் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் மற்றும் டெல்டா கொரோனா கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மூன்றாம் அலை பரவல் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. ஜனவரி 1ம் தேதி 2 ஆயிரம் என்ற அளவில் இருந்த கொரோனா கேஸ்கள் தற்போது 26 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

பொங்கலை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பினர். இதனால் சென்னையில் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.

'வாழ்க்கையில் ஏதாவது சாதிச்சியானு கேட்டா கண்டிப்பாக இதை சொல்வேன்'.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி 'வாழ்க்கையில் ஏதாவது சாதிச்சியானு கேட்டா கண்டிப்பாக இதை சொல்வேன்'.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 26,981 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,70,661 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் மட்டுமின்றி பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 20-25 என்ற அளவில்தான் கொரோனா மரணங்கள் பதிவாகி வந்தது. நேற்று 35 பேர் தமிழ்நாட்டில் பலியாகி உள்ளனர். நேற்று தமிழ்நாட்டில் 17,456 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

ஓமிக்ரான்

ஓமிக்ரான்

ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக பரவினாலும் அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்று சிலர் கூறி வந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்களும் உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்து இருக்கிறது. 37,073 பேர் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 28,06,501 பேர் இதுவரை தமிழ்நாட்டில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள் .

திடீர் உச்சம்

திடீர் உச்சம்

தமிழ்நாட்டில் நேற்று 26,981 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதற்கு முந்தைய நாளை விட திடீரென 300 கேஸ்கள் தமிழ்நாட்டில் அதிகமாக பதிவாகி இருக்கிறது. கொரோன கேஸ்கள் வேகமாக உயர்வதை இது உணர்த்துகிறது.

18 ஜனவரி : 23,888
17 ஜனவரி: 23,443
16 ஜனவரி: 23,975
15 ஜனவரி: 23,989
14 ஜனவரி: 23,459
13 ஜனவரி: 20,911
12 ஜனவரி: 17,934
11 ஜனவரி: 15,379
10 ஜனவரி: 13,990
09 ஜனவரி: 12,895
08 ஜனவரி: 10,978
07 ஜனவரி: 8,981

 என்ன அச்சம்

என்ன அச்சம்

இதனால் கொரோனா பரவல் தொடர்பாக Indian Institute of Science and Indian Statistical Institute (IISc-ISI) எச்சரித்தபடியே தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. வரும் நாட்டில் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் தினசரி கொரோனா வைரஸ் கேஸ்கள் 80 ஆயிரத்தை தாண்டும் என்று Indian Institute of Science and Indian Statistical Institute (IISc-ISI) ஆய்வு எச்சரிக்கை விடுத்தது.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil
     இன்னும் 10 நாட்கள்

    இன்னும் 10 நாட்கள்

    அதாவது இன்னும் 10 நாட்களில் தமிழ்நாட்டில் தினமும் 80 ஆயிரம் கேஸ்கள் வரை பதிவாகும் என்று இந்த ஆய்வு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்து வருகிறது. இதனால் தினசரி கேஸ்கள் 80 ஆயிரம் என்ற எண்ணிக்கையையோ நோக்கி செல்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐஐஎஸ்சி எச்சரித்தது போல கேஸ்கள் உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜனவரி இறுதியில் கேஸ்கள் உச்சம் தொட அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது

    English summary
    Tamilnadu Covid 19 Surge: Is the state Coronavirus trend goes as IISc-ISI report?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X