உதயநிதிக்கு அமைச்சர் பதவி! வார்த்தையை விட்ட சி.வி.சண்முகம்! பொன்முடிக்கு வந்ததே கோபம்! சுளீர் பதில்
சென்னை: திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, வாரிசு அரசியல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சுக்குப் பதிலடி கொடுத்தார்.
திமுக சார்பில் நேற்று செங்கல்பட்டு சட்டமன்றத்திற்குத் தொகுதிக்கு உட்பட்ட செங்கல்பட்டு நகர் பகுதியில் பேராசிரியர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
முன்னதாக வாரிசு அரசியல் தொடர்பாக சி.வி சண்முகம் திமுகவைக் கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், அதற்கு அமைச்சர் பொன்முடி கடும் பதிலடி கொடுத்துப் பேசினார்.

சி.வி. சண்முகம்
நேற்றைய தினம் தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.வி.சண்முகம், ஆளும் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.. மேலும், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் இங்கு மன்னரைப் போலத் தான் திமுக ஆட்சி நடைபெறுகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என வரிசையாக ஆட்சி நடத்துகின்றனர். இதுதான் அவர்கள் சொல்லும் திராவிட மாடலா?" என்று விமர்சித்தார்.

பொன்முடி பேச்சு
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய அமைச்சர் பொன்முடி, "இளைஞர் அணித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார்.. அந்த உணர்வு தான் அனைவருக்கும் இருக்க வேண்டும். உதயநிதியை அமைச்சராக்கியது தான் இப்போது பலருக்கும் பிரச்சினை இதன் காரணமாகவே அனைவரும் உதயநிதி உதயநிதி உதயநிதி எனப் பேசுகிறார்கள்.

அதிமுகவில் வாரிசு அரசியல்
என்னுடைய மாவட்டத்தில் ஒரு முன்னாள் அமைச்சர் இருக்கிறார்.. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குடும்பத்தில் இருந்து யாராவது வந்திருக்கிறார்களா எனப் பேசிக் கொண்டிருக்கிறார்.. ஆனால் சிவி சண்முகத்திற்கு வரலாறு தெரியவில்லை, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உயிரிழந்தவுடன் அவருடைய துணைவியார் ஜானகி எம்ஜிஆர் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

அவரே வாரிசு தான்
ஜானகி முதல்வராக இருந்த போது, நான்தான் உண்மையான வாரிசு என ஜெயலலிதா கூறினார்.. அது எப்படி என்பது உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.. இப்போது பேசுகிறாரே சி.வி சண்முகம் அவரது அப்பாவும் முன்னாள் எம்பி தான். இதன் காரணமாகவே அவருக்குக் கட்சியில் இடமும் சீட்டும் கிடைத்தது.. அப்படியிருக்கும் போது அவருக்கெல்லாம் வாரிசு அரசியல் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது..

சசிகலா தெரியுமா
ஜெயலலிதாவிற்கு உதவியாளராக இருந்தவர் தான் சசிகலா.. அவரையே தலைவராக்கிக் கொள்ள நிலையில் தான் இந்த அதிமுகவினர் இருந்தனர். ஆனால் வாரிசுகளாக இருந்தாலும் கட்சியைப் பணிகளை ஆரம்பம் முதலே ஈடுபட்டால் மட்டுமே திராவிட கொள்கை உணர்வு இருக்கும்.. அப்படி சிறு வயது முதலே பணியாற்றியவர் தான் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்கள் மீது நிறைய அக்கறை உள்ளது..

உதயநிதி
அவருக்கு எல்லா விளையாட்டுகளும் தெரியும். எனவே தான் அந்த துறைக்கு அவரை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் இருந்து பெண்கள் பலரும் சென்னைக்கு இலவசமாகத் தான் சென்று இருப்பீர்கள்.. இதைத் தான் நம்ம ஊர் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தையைச் சாதாரணமாகக் கூறினேன். ஆனால் அதை வைத்து அரசியல் செய்துவிட்டீர்கள். அதைக் கூட பெரிது படுத்தி விட்டீர்கள்" என்று அவர் தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications