சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆர்எஸ்எஸ் ஏஜென்ட்".. ரிஷிகள் - முனிவர்கள்.. கவர்னர் ரவி இப்பவே இதை செய்யணும்: முஸ்லிம் லீக் சுரீர்

Google Oneindia Tamil News

சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் ஆளுநர் ரவி, இந்த பதவியை விட்டு தானாகவே விலக வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆளுநர் ரவி சென்னை விழா ஒன்றில் பேசும்போது, "சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம்... மரத்தின் இலைகள், கிளைகளைப் போல, நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வேறுபடலாம்.

ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை போன்று, மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் சொல்கிறது.. அதுவே கடவுள்.

அப்படி பேசிய ஆளுநர் ரவி.. “நேரத்தை வீணடிக்க விரும்பல” - சிம்பிளாக 'நோஸ் கட்’ செய்த அமைச்சர் மா.சு!அப்படி பேசிய ஆளுநர் ரவி.. “நேரத்தை வீணடிக்க விரும்பல” - சிம்பிளாக 'நோஸ் கட்’ செய்த அமைச்சர் மா.சு!

 சனாதன தர்மம்

சனாதன தர்மம்

நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டுள்ளது.. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.. ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் தேவை.. இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி அடைவதை போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் ஆகிறது... வேற்றுமையில் ஒற்றுமை என்பதைதான், நமது சனாதனமும் வலியுறுத்துகிறது என்று கூறியிருந்தார்.

ஐயப்பன்

ஐயப்பன்

ஆளுநரின் இந்த பேச்சுக்கு, திமுக, விசிக உட்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.. அந்த வகையில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் விஎம்எஸ் முஸ்தபா அறிக்கை வெளியிட்டுள்ளர்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: ''சபரிமலை ஐயப்பனுக்காக பின்னணி பாடகர் யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக சபரிமலை ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விழாவில் பேசியுள்ளார்.

 ரிஷிகள்

ரிஷிகள்

அப்போது, 'ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதையே நமது மார்க்கம் கூறுகிறது. மற்ற நாடுகளைப் போல ராணுவவீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாடு உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவானது. இந்தியாவில் ராணுவம் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும்.

 முஸ்லிம் லீக்

முஸ்லிம் லீக்

காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகளும் முன்னேற்பாடுகள் செய்யாத நிலையில், அதை தடுப்பதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளது. என ஆர்.என்.ரவி தனது ஆளுநர் பதவியை மறுந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ்., ஏஜெண்ட் போல பேசியிருக்கிறார். எண்ணற்ற தியாகங்களை செய்து இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாடு உருவாக்கப்பட்டது என்பது கட்டுகதையல்ல, அதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அரசர்களாலும், ராணுவ வீரர்களால் இந்தியா உருவாகவில்லை என்ற அப்பட்டமான பொய்யை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

வெள்ளையர்கள்

வெள்ளையர்கள்

பல மாகாணங்களாக பிரிந்து இருந்த இந்தியாவை ஒருங்கிணைத்த பெருமை பல கட்டங்களில் ஆட்சி செய்த அரசர்களையே சாரும். அதே போன்று, வெள்ளையர்களால் இந்திய தேசம் அடிமைப்பட்டு கிடந்த போது, அவர்களை எதிர்த்து போராடி, வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட அரசர்கள் தங்களது இன்னுயிரை இந்திய தேசத்திற்காக தியாகம் செய்திருக்கிறார்கள்.

 அழகா இதெல்லாம்?

அழகா இதெல்லாம்?

ஒருபுறம் சீனா மறுபுறம் பாகிஸ்தான் பல்வேறு அச்சுறுத்தலை சந்தித்து வரும் இந்தியாவை தங்களது சுக துக்கம் இளமை காலங்களை தொலைத்துவிட்டு, எல்லையிலும், இமயமலை போன்ற கடும்குளிரிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் ஆர்.ரன்.ரவி கொச்சைப்படுத்தி இருக்கிறார். தனக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆளுநர் பதவியின் அழகை உணர்ந்து ஆர்.என்.ரவி செயல்படுவதை விட்டுவிட்டு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் ஆர்.என்.ரவி ஆளுநர், இந்த பதவியை விட்டு தானாகவே விலக வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
tamilnadu muslim leaque severely condemns governor rn ravis controversy speech ஆளுநர் ரவி பேச்சுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X