பாஜக-வுக்கு 3வது இடம்.. தமிழக மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள் - மகிழ்ச்சியில் அண்ணாமலை
சென்னை: பாஜகவுடன் பயணிக்க மக்கள் தயாராகி விட்டார்கள், கடின உழைப்பால் தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மூன்றாம் இடம் வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 138 நகராட்சிகளில் திமுக132 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. பேரூராட்சியிலும் திமுகவே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

பாஜக
சட்டசபைத் தேர்தலில் இருந்த அதே கூட்டணியோடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டது திமுக. நயினார் நாகேந்திரன் ஏற்படுத்திய சர்ச்சையால் அதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்தது. இதனால் பாஜக-வும் தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. தமிழகத்தில் பாஜக-வுக்கு எந்த அளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அறியவும் தமிழக பாஜக இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்கியது.

தேர்தல் முடிவுகள்
பாஜக, 21 மாநகராட்சியில் 22 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து, நகராட்சியில் 56 வார்டுகளிலும், பேரூராட்சியில் 230 வார்டுகளிலும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது பாஜக. கன்னியாகுமரியில் சில இடத்தில் திமுக மற்றும் அதிமுகவை வாஷ் அவுட் செய்துள்ளது பாஜக. ஆனால் பல இடங்களில் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறது பாஜக. நகர்புற உள்ளாட்சி முடிவுகளின் படி திமுக, அதிமுக முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

அண்ணாமலை
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி. பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர். பாஜகவை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். கடின உழைப்பால் நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு வந்துள்ளோம்.

கூட்டணி
மக்கள் நலனுக்காக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும். பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் கவலையடைய வேண்டாம். தொடர்ந்து பயணிப்போம். பாஜகவின் வலிமையை உணர்த்துவதற்காகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். அதிமுகவுடனான தேசிய கூட்டணி தொடரும். பாஜக வலிமை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தலில் அதிமுக பின் தங்கிவிட்டதால் குறைத்து மதிப்பிடக் கூடாது'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications