தமிழ்நாடு போலீசின் மிக முக்கியமான போர்ட்டல் ஹேக்.. குற்றவாளிகள் + காவலர்களின் டேட்டா திருட்டு?
சென்னை: தமிழ்நாடு போலீசாரின் ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு போலீசார் குற்றவாளிகள் தரவுகள், புகார் குறித்த தரவுகளைச் சேமித்து வைக்கத் தனியாக ஒரு போர்ட்டலை வைத்துள்ளனர். இதற்கிடையே தமிழ்நாடு போலீசாரின் ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சாப்ட்வேர்: பொதுவாகக் குற்றவாளிகள் பிடிக்க, காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்க மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு போலீசார் இந்த சாப்ட்வேரை தான் பயன்படுத்துவார்கள். மேலும், இதில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட போலீசாரின் விவரங்களும் இந்த போர்ட்டலில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போர்ட்டலை தான் கடந்த 2024 மே 3ஆம் தேதி அடையாளம் தெரியாத சிலர் ஹேக் செய்துள்ளனர். மேலும், அவர்கள் அந்த டேட்டாவையும் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'வலேரி' (Valerie) என்ற பெயரில் இயங்கும் அந்த ஹேக்கர் தான் தமிழ்நாடு போலீசாரின் ஃபேஸ் ரெகக்னிஷன் போர்ட்டலை ஹேக் செய்துள்ளதாக போலீசார் வட்டாரங்கள் கூறுகின்றனர்..
என்ன தரவு: குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் உள்ளிட்டோரின் தகவல்கள் அந்த போர்ட்டலில் இருந்த தமிழ்நாடு ஃபேஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேரில் தான் இருந்தது. மேலும், அதில் எஃப்ஐஆர் எண்கள், தேதிகள், புகார் தொடர்பான விவரங்கள் மற்றும் 50,000 காவல்துறை அதிகாரிகளின் முகவரிகள் மற்றும் தொலைப்பேசி எண்களும் அதில் இருந்ததாக கூறப்படுகிறது.
"ரூ.2000 கோடி.." 4 கண்டெய்னர்களில் கட்டுக்கட்டாக பணம்.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்! என்ன நடந்தது?
போலீஸ் விளக்கம்: இருப்பினும், போலீசார் இந்த விவகாரத்தில் வேறு ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளனர். அதாவது சர்வரில் டேட்டா எதுவும் ஹேக் செய்யப்படவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அட்மின் லாகின் சமரசம் செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், இப்போது சிக்கலைச் சரி செய்துவிட்டதாகவும் இதனால் பீதியடையத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications