3 நாளாக முதலிடம்.. உள்மாவட்டங்களில் மோசமாகும் நிலை.. தமிழகத்திற்கு உடனடி தேவை ஸ்டிரிக்ட் லாக்டவுன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் புதிய கொரோனா கேஸ்கள் வரும் மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து மூன்று நாட்களாக முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் தினசரி பதிவாகும் கொரோனா கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. 10 நாட்களுக்கு முன் தினமும் 4 லட்சம் கேஸ்கள் பதிவான நிலையில், தற்போது தினசரி கேஸ்கள் 2.50 லட்சமாக சராசரியாக பதிவாக தொடங்கி உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தினசரி கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளன. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகாவில் தினசரி கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பதிவான கேஸ்களை விட நேற்று தமிழகத்தில்தான் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. இரண்டு நாள் முன்பு 33,059 கேஸ்கள் தமிழகத்தில் பதிவானது. நேற்று முதல்நாள் தமிழகத்தில் 34875 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று தமிழகத்தில் 35579 கேஸ்கள் பதிவானது. மூன்று நாட்களாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது.

எப்படி

எப்படி

சென்னையில் தினசரி கேஸ்கள் 6000- 6400 க்கு இடையில் மாறி மாறி வந்தாலும் உள்மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, மதுரை, திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையில் நேற்று 6073 கேஸ்கள் மட்டுமே பதிவானது.

ஆனால்

ஆனால்

ஆனால் செங்கல்பட்டில் 2092 கேஸ்கள், கோவையில் 3335 கேஸ்கள், ஈரோட்டில் 1505 கேஸ்கள், மதுரையில் 1269 கேஸ்கள், திருவள்ளூரில் 1791 கேஸ்கள், திருப்பூரில் 1581 கேஸ்கள், திருச்சியில் 1375 கேஸ்கள் பதிவானது. உள்மாவட்டங்களில் இப்படி தொடர்ந்து அதிகரிக்கும் கேஸ்கள் அதிகரிப்பதற்கும் மக்கள் லாக்டவுன் விதிகளை முறையாக கடைபிடிக்காததும் முக்கிய காரணமாக.

தேவை

தேவை

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதால் உடனடியாக ஸ்டிரிக்ட் லாக்டவுன் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உள்மாவட்டங்களில் எங்கெல்லாம் கேஸ்கள் அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் 2020ல் செய்தது போல கட்டுப்பாட்டு பகுதிகளை உருவாக்க வேண்டும். கண்டெயின்மெண்ட் பகுதிகளை உருவாக்கி மக்கள் வெளியே செல்வதை தடுக்க வேண்டும்.

அதிக கேஸ்கள்

அதிக கேஸ்கள்

அதிக கேஸ்கள் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் விதிகளை விதிக்க வேண்டும். மீண்டும் சிவப்பு, மஞ்சள், பச்சை என்று கொரோனா கேஸ்களுக்கு ஏற்றபடி பகுதிகளை வகைப்படுத்தி அதற்கு ஏற்றபடி தீவிர கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். தற்போது உள்மாவட்டங்களில் மக்கள் வெளியே சுற்றுவதும்., சிலர் காலை 10 மணிக்கு பின்பு கூட இங்கும் அங்கு சுற்றுவதும் தொடர்கதையாகி உள்ளது.

 கஷ்டம்

கஷ்டம்

பலர் லாக்டவுனை பெரிதாக மதிக்கவில்லை. எங்களுக்கு என்ன வந்தது என்பது போல பலர் வெளியே சுற்றி வருகிறார்கள். இதை தடுக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும், எல்லா ஏரியாவிலும் போலீஸ் எப்போது கண்காணிப்பதும் கஷ்டம். இதனால் மாவட்ட வாரியாக கொரோனா கேஸ்களுக்கு ஏற்றபடி கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். கேரளாவில் கிராமம் கிராமமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தமிழகம்

தமிழகம்

கேரளாவில் கொரோனா கேஸ்கள் அதிக உள்ள கிராமங்களில் கூடுதல் கண்காணிப்புகள் செய்யப்பட்டன. அதேபோன்ற கட்டுப்பாடுகளை தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். இது கொரோனா பரவலை உள்மாவட்டங்களில் குறைக்கும். உள்மாவட்டங்களால்தான் கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் அதிகரிக்கிறது என்பதால் தமிழக அரசு, இனி உள்மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+