நவ.1 முதல் மாணவர்களுக்கு ஜாலி.. ஆட்சியர்களுக்கு சற்று கடினமான நாள்.. கனமழையை சூசகமாக சொன்ன வெதர்மேன்
சென்னை: சென்னையில் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வரும் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு மழையை தரக் கூடிய வடகிழக்கு பருவமழை நேற்றைய தினம் தொடங்கியது. இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாகும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடுமுறை எப்போது
இந்த நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி அல்லது நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். அதாவது சிறப்பான சம்பவம் சென்னைக்கு காத்திருக்கிறது என்றே அவர் கணித்திருந்தார். அத்துடன் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை போல் இந்த ஆண்டும் அதிகமாகவே இருக்கும் என தெரிவித்திருந்தார்.

பிப்ரவரி மாதம்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மழையும் குளிரும் இருந்தது நினைவுக்கூரத்தக்கது. இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த சீசனில் எந்த நாளில் சென்னைக்கு முதல் மழை விடுமுறை கிடைக்கும் என சென்னை ரெயின்ஸ் எனும் ட்விட்டரில் கருத்து கணிப்பு நடந்துள்ளது.

3 தேதிகளில் எந்த தேதி
அதில் நவம்பர் 1, நவம்பர் 2, நவம்பர் 3 ஆகிய தேதிகளில் விடுமுறை இருக்குமா இல்லை இந்த வடகிழக்கு பருவமழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறையே இருக்காதா என்ற கருத்து கணிப்பு இருந்தது. இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பதிலளிக்கையில் ஒரு வேளை 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்குமா? அடுத்த வாரம் பள்ளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.

ஆட்சியர்களுக்கு கடினமான நாள்
அதே வேளையில் ஆட்சியர்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். மழை என்றால் விடுமுறை என்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் ஆட்சியர்களுக்கு அப்படி இல்லை, மழை வருவதை வானிலை அறிக்கையை வைத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பதா வேண்டாமா, விடுமுறை விட்ட பிறகு மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கினால் என்ன செய்வது? ழையின் தீவிரத்தை கவனிக்காமல் பள்ளிக்கு விடுமுறை விடாவிட்டால் மாணவர்கள் சிரமம் அடைவர் உள்ளிட்ட பல கேள்விகளால் அவர்களின் நிலை கடினமாக இருக்கும். இதைத்தான் வெதர்மேன் தெரிவித்துள்ளார். தற்போதெல்லாம் ஆட்சியர்களுக்கு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் மாணவர்கள் மெசேஜ் அனுப்பி மழைக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டு வருகிறார்கள். இதை சில ஆட்சியர்கள் ஜோவியலாக எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் இன்றைய தினம் விடுமுறைதான். ஆனால் வீட்டுப்பாடங்களை எழுதி வர வேண்டும் என மாணவர்களின் மகிழ்ச்சிக்கு கேட் போடுகிறார்கள். ஒரு காலத்தில் ஓய்வு பெற்ற வானிலை மைய இயக்குநர் ரமணனை இப்படித்தான் மாணவர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications