சென்னையில் அடுத்த 2 நாளுக்கு.. வெயில்- கருமேகங்கள்- கனமழை ரிப்பீட்டு.. இதுதான் பேட்டர்ன்.. வெதர்மேன்
சென்னை: அடுத்த இரு தினங்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையின் பேட்டர்ன் எப்படி இருக்கும் என்பது குறித்து வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருந்தது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரமடைந்து தமிழகம், புதுவையில் நல்லதொரு மழையை கொடுத்தது.
இந்த நிலையில் இந்த காற்றழுத்தமானது இன்றைய தினம் வலுவிழந்துவிட்டது. எனினும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்கள்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சூரிய வெளிச்சம் வரும்.

மேற்கு மாவட்டங்கள்
மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய இடங்களில் தீவிர மழை தொடரும். காற்றழுத்தமானது வலுவிழந்து அரபிக் கடலுக்குள் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொங்கு மண்டலத்தின் வடஉள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும்.

கோவை பெல்ட்
எனவே கோவை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு நல்ல மழை பெய்யும். தெற்கு தமிழக உள்மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் மழை பெய்யும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் வடசென்னையான மணலி டூ திருத்தணி பெல்ட்வரை மேகக் கூட்டங்களை பார்க்க முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள்
இந்த போஸ்ட்டின் கீழே நெட்டிசன்கள் தங்களது கமென்ட்டில் அவினாசியில் நேற்றைய மழை நிலவரத்தை ஒப்பிடும் போது இன்று மழையின் தீவிரம் குறைந்துள்ளது என கூறியுள்ளனர். இன்று அதிகாலை முதலே சென்னையில் பயங்கர இடி சப்தம் ஏற்பட்டதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இப்படியே போன இந்த வாரமும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் போலயே என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications