சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை மழை.. பருவமழை தொடங்கப் போகிறதா.. வெதர்மேன் தரும் மகிழ்ச்சி செய்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    பருவமழை தொடங்கப் போகிறதா ? வெதர்மேன் கணிப்பு ?

    சென்னை: சென்னையில் திடீரென பெய்த மழை பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.

    தமிழகத்துக்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இருக்கும். இதில் காலநிலைக்கேற்ப மழை தொடங்கும். கடந்த மாதம் இறுதியில் சென்னையில் தொடர் மழை பெய்தது.

    வானிலை மையம்

    வானிலை மையம்

    இது வடகிழக்கு பருவமழையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அரபிக் கடலில்தான் புயல் உருவானது. அது பின்னர் ஓமனுக்கு சென்றுவிட்டது. இதனால் மழை அக்டோபர் 2-ஆவது வாரத்தில் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.

    தொடக்கம்

    தொடக்கம்

    இந்நிலையில் சென்னையில் இன்று வெப்பசலனம் காரணமாக பரவலாக ஆங்காங்கே மழைப் பெய்தது. கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் இது பருவமழைக்கான தொடக்கமாக இருக்கலாம்.

    மழை

    மழை

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் மழை பெய்யாமலும் சில இடங்களில் நல்ல மழையும் பெய்யும். மேகக் கூட்டங்கள் எந்த திசையில் போகும் என்று கணிக்க முடியவில்லை.

    கொஞ்ச நேரம்

    கொஞ்ச நேரம்

    வடசென்னையில் மழை ஓய்ந்துவிட்டது. இது மெல்ல பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் மழை பெய்யும். ஆனால் கொஞ்ச நேரத்தில் நின்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    TN weatherman says that Typical pre monsoon stand and deliver Thunderstorms in Chennai and KTC belt. Some places misses out and some places gets pounded As you see ppi tool (2nd pic), the clouds are direction less. North Chennai spell is clearing. Its turn of omr, ecr belt to get rains. Enjoy. It will stop in a while.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X