விஜய்யின் முதல் அரசியல் பயணம்.. கால் வைக்க போவதே காவிரி டெல்டாவில் தான்.. மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து விஜய் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், முதற்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கினார். தவெக தொடங்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் அறிக்கையிலேயே 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்பதையும் விஜய் அறிவித்தார். இதன்பின் மாநாடு, நிர்வாகிகள் நியமனம், 2ஆம் ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம், பரந்தூர் மக்கள் சந்திப்பு ஆகியவற்றை விஜய் மேற்கொண்டார்.

Tamizhaga Vetri Kazhagam Leader Vijay to Begin Statewide Tour from August 15

இதன்பின் கடந்த மாதம் 12 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி விஜய் கவுரவித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் விஜய் அரசியல் மேடைகளில் பெரியளவில் தோன்றவில்லை. இதுவரை அறிக்கை மூலமாக மட்டுமே அரசியல் மேற்கொண்டு வருகிறார். இது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனிடையே ஜூலை மாதத்தில் இருந்து நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. மொத்தமாக 42 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள விஜய், திருச்சி அல்லது மதுரையில் இருந்து பயணத்தை தொடங்குவார் என்று அக்கட்சியினர் கூறி வந்தனர். விஜயின் சுற்றுப்பயணம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று நம்பப்படுகிறது.

விஜயின் பிறந்தநாளுக்கு பின் முழு நேர அரசியலில் தீவிரம் காட்டுவார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், இந்த சுற்றுப்பயணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளை குறிவைத்து விஜய் களம் இறங்கியிருப்பதை அவரது கட்சி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்,

எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை. விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரை ஏற்பாடுகளை மேற்கொள்ள தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு 10 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விஜய் தற்போது களம் இறங்கியிருப்பதை தவெகவினர் வரவேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+