100 டன் ஆக்சிஜன்.. ரயில் கொண்டுவர சீனாவிடம் இருந்து 12 ISO கண்டைனர்களை வாங்க தமிழக அரசு முடிவு
சென்னை : ஒடிசாவிலிருந்து தினசரி ஒதுக்கீடான 100 டன் ஆக்சிஜனை ரயில் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு, சீனாவிடம் இருந்து 12 ISO கண்டைனர்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த 12 ISO கண்டைனர்கள் சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் மே 22ம் தேதி வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் தமிழக அரசிடம் 9 ISO கண்டைனர்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 20 டன் பதிவுள்ளவை. இந்த கண்டெய்னர்கள் மூலம் அரசு ஒடிசாவின் காலிங்காநகரில் இருந்து ஆக்சிஜனை ரயில் வழியாக தமிழகத்திற்கு அரசு கொண்டு வருகிறது. இது தவிர சாலை வழியாக ஒடிசாவின் ரூர்கோலாவில் இருந்து 12 டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது. ஒவ்வொரு டேங்கரும் 15 டன் எடை உடையவை ஆகும்.
தற்போதைய நிலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ஒடிசாவில் இருந்து ரயில் அல்லது சாலை மூலம் சென்னைக்கு ஆக்சிஜன் கொண்டு வர மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகிறது. இத்தனைக்கு காலி டேங்கர்களை ராஞ்சிக்கு விமானம் மூலம் அரசு அனுப்பி வைக்கிறது.
இந்த சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், தமிழக அரசு மேலும் 12 ஐஎஸ்ஓ கண்டெய்னர்களை சீனாவிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது
தினமும் 100டன் ஆக்ஜிஜன் ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அவற்றை கொண்டு வர இந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள் தேவை என்பதால் மாநில அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. கண்டெய்னர்கள் விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான பணிகள் சீனாவில் நடந்து வருகிறது. இவை வரும் மே 22ம் தேதி தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications