மது பாட்டில்களை திரும்பப்பெறும் மெஷின்: டெண்டர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெற ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை நிறுவுவதற்கான டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. காலி மது பாட்டில்கள் காடுகள், மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் வீசப்படுவதால் விலங்குகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கவும், இயற்கையை பாதுகாக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

TASMAC Bottle Collection Tender

மேலும், டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில் வாங்கும் போது, அதிகபட்ச விலையுடன் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக டெபாசிட் தொகையாக வசூலிக்கப்படுகிறது. பாட்டிலை திரும்பக் கொடுக்கும்போது ரூ. 10 திரும்பத் தரப்படும்.

இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்காக, 2000 பாட்டில்களை பெறும் வசதி கொண்ட ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை அமைத்து இயக்க, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி, பாட்டில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பாட்டில் வியாபாரிகள் நலச்சங்கம் தாக்கல் செய்த மனுவில், 'மாநிலம் முழுவதற்கும் சேர்த்து ஒரே நிறுவனத்தை இப்பணிக்கு நியமிக்க இருப்பதாகவும், ஏழு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் டெண்டர் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், இந்த டெண்டரை ரத்து செய்து, மாவட்ட அளவில் காலி பாட்டில்கள் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் பங்கேற்கும் வகையில் புதிய டெண்டர் நிபந்தனைகளை திருத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "டெண்டர் படிவங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 22ஆம் தேதி கடைசி நாள் எனவும், அன்றைய தினம் மாலை தொழில்நுட்ப டெண்டர் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், டெண்டர் நிபந்தனைகளை பூர்த்தி செய்வோர் டெண்டரில் கலந்து கொள்ள எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த டெண்டரில் எத்தனை பேர் பங்கேற்றனர்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, டெண்டரை திறக்கலாம், ஆனால், இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+