பாட்டிலுக்கு ரூ.10 டாஸ்மாக்.. திமுக அரசு மீது பாய்ந்த எடப்பாடி பழனிசாமி.. இன்று கடலூரில் என்னாகுமோ?
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படவில்லை என்கிறார்கள்.. அதிமுகவிலேயே சிலர் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும் சலசலப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுற்றுப்பயணத்தை துவங்கி நடத்தி வருகிறார்.. அந்தவகையில், இன்றைய தினம் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.. இதற்காக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் அரியணையில் ஏறும் முனைப்பில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

அதன் ஒரு பகுதியாகவே, அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.. இந்த சுற்றுப்பயணத்தில் அவர் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்கவும் முடிவு செய்தார்.
முதற்கட்ட சுற்றுப்பயணம்
அந்தவகையில், தன்னுடைய முதற்கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி கடந்த 7-ந்தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் இருந்து ஆரம்பித்தார்.. ஒவ்வொரு நாளும் அந்தந்த மாவட்ட மக்களையும், அதிமுக நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.. எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் அதிமுகவினர் மட்டுமின்றி, அந்த பகுதியை சேர்ந்த பாஜக தலைவர்களும் பங்கேற்று வருகிறார்கள்.
அந்தவகையில் நேற்றைய தினம், விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது அவர் பேசும்போது, "மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சட்டப்பேரவையிலும், அதற்கு வெளியிலும் நாங்கள் வலியுறுத்தியதால்தான் 22 மாதங்கள் கழித்து அதை கொடுத்தனர். அதையும் அனைவருக்கும் தருவோம் என்று கூறிவிட்டு, 1 கோடி பேருக்கு மட்டும் கொடுத்தனர்.
பாட்டிலுக்கு ரூ.10
தற்போது மக்களிடம் திமுக ஆட்சி செல்வாக்கை இழந்திருக்கும் நிலையில், இன்னும் 30 லட்சம் பெண்களுக்கு ரூ.1,000 தர இருக்கிறோம் என்று பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. தறிகெட்டு நடக்கும் போதைப் பொருள் விற்பனையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கொலை கொள்ளை அதிகரித்திருக்கிறது.
இதற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என அனைவரும் ஆள்வதற்கு வந்துவிட்டனர். ஆனால் சாதாரண மனிதர்களான நாங்கள் ஆளக் கூடாதா ? டாஸ்மாக் ஷகடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலித்து, வருடத்துக்கு ரூ.5,400 கோடி கொள்ளையடிக்கிறார்கள். அதனால்தான் தற்போது அமலாக்கத்துறையில் சிக்கியிருக்கிறார்கள்" என்றெல்லாம் திமுகவை சரமாரியாக சாடினார்.
கடலூர் - சுற்றுப்பயணம்
இந்நிலையில், இன்றைய தினம் கடலூர் மாவட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறார்.. கடலூரை பொறுத்தவரை, ஏராளமான பிரச்சனைகள் நிலவுவதாகவும், அவையெல்லாம் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுகுறித்தெல்லாம் எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய உரையின்போது காட்டமாக விமர்சிப்பார் என்றே தெரிகிறது.
ரயில் விபத்து - அறிக்கை
இதனிடையே, 4 நாட்களுக்கு முன்பு, செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் மனித உயிர்கள் இறந்தது, மிகுந்த அதிர்ச்சியை உண்டுபண்ணி விட்டது. செம்மங்குப்பம் லெவல் கிராசிங் கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு தற்போது கண்டறிந்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் கேட் கீப்பர் பங்கஜ் கேட்டை (LC-170) திறந்தே வைத்திருந்தது உறுதியாகியுள்ளது.
அன்று காலை 6:45 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் இந்த கேட் திறந்து இருந்தபோது சென்றுள்ளதும் புலனாய்வு விசாரணையில் வெளிவந்துள்ளதால், இது கேட் கீப்பரின் அலட்சியமே என்று அறிக்கையும் வெளியாகி மேலும் பரபரப்பை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
தமிழகத்தில் ஏன் கள் விற்கக் கூடாது? டாஸ்மாக்கில் மது விற்கிறீர்களே? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications