Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்கெட்ச் உதயநிதிக்கு.. அப்ரூவராகும் விசாகன்? டெல்லி போல் சுக்குநூறாகும் அஸ்திவாரம்! கேஎஸ்ஆர் பகீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரண்டாவது முறையாக சோதனை நடத்தியது. டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் இடமும் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டை எப்படி ஆராய்ந்தாலும் அது உதயநிதியை கை காட்டுகிறது எனவும், விசாகன் ஐஏஎஸ்-ஐ அரசு தரப்பு சாட்சியாக மாற்றினால் டெல்லியைப் போல தமிழ்நாட்டிலும் ஆளும் தரப்பின் அஸ்திவாரம் சுக்குநூறாகும் எனக் கூறியிருக்கிறார் அரசியல் விமர்சகரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.

இந்த நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாகவும் புகார் கூறப்பட்டது.

TASMAC KS Radhakrishnan udhayanidhi stalin

இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி, அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று திடீரென அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. குறிப்பாக டாஸ்மாக் மேலான இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-ஐ அழைத்துச் சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடந்தது. மேலும் ரத்தீஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாகன் ஐஏஎஸ்-ஐ அரசு தரப்பு சாட்சியாக மாற்றினால் டெல்லியைப் போல தமிழ்நாட்டிலும் ஆளும் தரப்பின் அஸ்திவாரம் சுக்குநூறாகும் எனக் கூறியிருக்கிறார் அரசியல் விமர்சகரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் ரெய்டு, உதயநிதியின் உறவினரும், திடீர் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு, உதயநிதியின் நெருக்கிய நண்பர் ரதீசுக்கு வலைவீச்சு என அடுத்தடுத்து தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. அமலாக்கத்துறை நடத்தும் இந்த ரெய்டை எப்படி ஆராய்ந்தாலும், அது உதயநிதியை கைகாட்டுகிறது.

டாஸ்மாக்கை மட்டுமே அமலாக்கத்துறை குறிவைத்துள்ளதாக கருதப்பட்ட நிலையில், திடீர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு வரை டம்மியாக இருந்தவர், இந்த ஆறு மாதங்களில் தனது DAWN (தமிழில் உதயசூரியன்) திரைப்பட நிறுவனம் மூலம் திடீரென 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கிறார்.

இதேபோல ரதீஷ், எந்தெந்த நிறுவன மதுபானங்களை வாங்க வேண்டும் என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனுக்கு உத்தரவிட்டுள்ளார். ரதீஷின் கேள்விகளுக்கு விசாகன் பவ்வியமாக பதில் அளித்த ஆதாரங்களும் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளது. இப்போது ரதீஷ் தலைமறைவாகி உள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை அப்ரூவராக மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விசாகன் அரசுத் தரப்பு சாட்சியாக மாறினால், அது டெல்லியை போல தமிழ்நாட்டிலும் ஆளும் தரப்பின் அஸ்திவாரத்தை சுக்குநூறாக்கும். கடந்த மாதம் நடத்திய ரெய்டுக்கு பின்னான, திமுக அரசின் நகர்வுகளை அமைதியாக கவனித்து வந்த அமலாக்கத்துறை, சரியான நேரத்தில் மீண்டும் ரெய்டை தொடங்கியுள்ளது. திமுகவின் முக்கிய புள்ளியை சுற்றிவளைத்துள்ளது" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+