சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஊதிய உயர்வு அறிவித்த தமிழக அரசு.. எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூபாய் 500 ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான்.

அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மூலம் இவ்வளவு வருமானம் வரும் என்று இலக்கே நிர்ணயித்து விடலாம்.

இந்த நாட்களில் மட்டும் பலநூறு கோடிகள் வருமானம் பார்த்து, அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுக்கிறது டாஸ்மாக். இப்படி அரசுக்கு வருவாயை அள்ளி கொடுக்கும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் நீண்ட நாட்களாக ஊதிய உயர்வு எதிர்பார்த்து வந்தனர்.

மத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. மிஸ் பண்ணாதீங்கமத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. மிஸ் பண்ணாதீங்க

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூபாய் 500 ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

தற்காலிக உதவியாளர்கள்

தற்காலிக உதவியாளர்கள்

தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் 12,750 லிருந்து, 13,250 ஆக அதிகரித்துள்ளது. விற்பனையாளர்களின் ஊதியம் 11,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உதவி விற்பனையாளர்களின் ஊதியம் 10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களின் ஊதியம் 12,750 லிருந்து, 13,250 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு டாஸ்மாக் நிறுவனம் கூறியுள்ளது.

Recommended Video

    Tasmac-ஐ நம்பியிருக்க தேவையில்லை.. Tamilnadu-ன் எதிர்காலமே இனி இதுதான்.. முதல்வர் அமைத்த கமிட்டி
    விலைப்பட்டியல்

    விலைப்பட்டியல்

    தமிழக அரசு கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் பெரும் மாற்றம் செய்து வருகிறது. ''டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.மதுவிற்பனைக்கு பற்றுசீட்டு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்க வேண்டும்'' என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள்,. சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இது தவிர டாஸ்மாக்கில் மொத்தமாக மதுவாங்குபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நபர்களுக்கு மொத்தமாக மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tasmac employees have been given a Rs. 500 pay rise in tamilnadu. The pay rise will be effective from April 1. The Tamil Nadu government has been making major changes to Tasmac stores over the past few days
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X