டாஸ்மாக்கில் குவார்ட்டர் பாட்டிலில் மாற்றம்.. அரக்கோணத்துக்கு "பில்" கிடைச்சதா? மதுக்கடைகளில் அதிரடி
சென்னை: மதுக்கடைகளில் நிலவும் முறைகேடுகளை தடுக்கும் விதத்தில் , புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அமைச்சர் முத்துசாமி தந்துள்ள பேட்டி ஒன்று பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
தமிழக அரசுக்கு, மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது.

வரி வருவாய்: தமிழ்நாடு என்றில்லை, நாட்டின் பல மாநிலங்களின் அதிகப்படியான வரிவருவாய், மதுபானத்தை விற்பதால் வரும் வருமானமாக இருப்பதாக சொல்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை குறைத்தாகிவிட்டது, டாஸ்மாக் நேரத்தையும் குறைத்தாகிவிட்டது. எனினும், டாஸ்மாக் கடைகளுக்கு உள்ள கிராக்கி, இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
தற்போது, அதிகபட்ச சில்லறை விலைக்கு (எம்.ஆர்.பி.) மேலாக மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.50 வரை கூடுதலாக வசூலிக்கிறார்கள்.. இதுபோல விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படையாக விற்பனை செய்யவும் அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மதுபானங்கள்: எனவேதான், கியூ ஆர் குறியீடு ஸ்கேன் செய்து, அதன்மூலம் பணம் செலுத்தி மதுபானங்களுக்கான பில்லை பெறும் வசதியை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது இதை நடைமுறைப்படுத்தி அறிவித்துள்ளது..
முதல் கட்டமாக சோதனை அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் உள்ளிட்ட 7 கடைகளிலும், ராமநாதபுரத்தில் 7 கடைகளிலும் இன்று கியூ ஆர் குறியீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளன.. மேலும், கலால் லேபில்களில் கியூ-ஆர் குறியீடுகளையும் அட்டைப் பெட்டிகளில் ஒரு பரிமாண பார்கோடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
மது பாட்டில்: இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "மது பாட்டிலில் அச்சிடப்பட்ட கியூ-ஆர் குறியீடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டவுடன் பில் அச்சிடப்பட்டு வெளிவரும்... ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனித்தனி பில்கள் போடப்படும்.
2 மாவட்டங்களில் இந்த புதிய முறையை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.. இதன் வரவேற்பை பொறுத்து, கணினியை மறு வடிவமைப்போம்... இன்னும் ஓரிரு மாதங்களில் மற்ற எல்லா டாஸ்மாக் கடைகளிலும் கணினி மயமாக்கப்டும்... அனைத்து கடைகளையும் கணினி மயமாக்குவதன் மூலம் அதிகாரிகள் கண்காணிக்கவும், இருப்புகளை சரிபார்க்கவும் முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கவுன்சிலிங்: இதனிடையே, குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.. ஈரோட்டில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, "மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவது என்பது சாத்தியமில்லை. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். ஏற்கனவே 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
கடைகள் மூடப்படும்: குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனால், முன்னேற்பாடுகளை செய்துவிட்டு மதுக்கடைகள் மூடப்படும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்தால் தமிழகத்தில் அமல்படுத்த தயாராக இருக்கிறோம்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications