A1 செந்தில் பாலாஜி.. டாஸ்மாக் முறைகேடு - திமுக முன்னாள் அமைச்சர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. FIR-ல் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்தபோது, செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பதவியில் இல்லாத காலத்திலும், டாஸ்மாக் ஒப்பந்தங்களில் அவரது செல்வாக்கு நீடித்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தது.

tasmac

இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நெருங்கியவர்களுக்கு தொடர்புடைய 41 இடங்களில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் மற்றும் மதுபான ஆலைகளிடம் பணம் வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ். விசாகன் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரத்தீஷ் ராஜ், மூலனூர் கார்த்தி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பார் ஓனர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து முறைகேடு செய்ததாகவும், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், கரூரில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் வடக்கில் ரூ.17.27 கோடி, தெற்கில் ரூ.13.58 கோடி மற்றும் நீலகிரியில் ரூ.1.95 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், 2021 முதல் 2025 வரை வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விட ரூ.500 வரை கூடுதலாகவும், இதர மதுபான பிராண்டுகளுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையிலும் பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மதுபான ஆலைகள், பீர் தயாரிப்பு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் அடையாளம் தெரியாத சில அரசு ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய பிற நபர்களும் குற்றம்சுமத்தப்பட்டகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+