மது வாங்குபவர்களுக்கு ஷாக்.. தமிழகம் முழுவதும் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனையொட்டி டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர் 2, மே 1 தொழிலாளர் தினம் என 8 நாட்கள் மூடப்படும். இது தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளுமே தேர்தல் சமயங்களில் மூடப்படும்.
இந்நிலையில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில், டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட உள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," மகாவீரர் பிறந்த நாளான மகாவீர் ஜெயந்தி இந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்று DRY DAY ஆக அனுசரித்து அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL, FL2, FL3/FL3A/FL3AA and FL11) ஆகிய அனைத்தும் இயங்காது. அங்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதேபோல், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications